அ - வரிசை அக்கரகாரம்

அக்கர காரம் – AKKRA KARAM :---

























வேறுபெயர் – அக்கராகாரம், அகிராகாரம்
ஆங்கில பெயர் – PELLITORY OF SPAIN, PELLITORYROOT, PYRETHIRADIX, ROOT OF THE ANTHEMIS PYRETHRUM.
தாவரவியல் பெயர் ANACYCLUS PYRETHRUM.
                இந்த மரத்தின்வேர் பட்டை இரண்டு மட்டுமே மருத்துவ பயன்பாட்டில் உள்ளது.இந்த வேர் விரல் பருமன் அளவிற்கு இருக்கும். நிறத்தில் வெண்கருமையாக இருக்கும். இதை மென்று சுவைக்க நாக்கு, உதடு இவ்விடங்களில் விறு விருப்பையும், எரிச்சலையும் உண்டாக்கும். வாயில் உமிழ் நீர் சுரக்கும் இது வங்காளம், அரபு நாடுகளில் வளர்க்கப்படுகிறது.
சுவை – கார்ப்பு, வீரியம் – வெப்பம், பிரிவு – கார்ப்பு.
செயல் –
வெப்பமுண்டாக்கி STIMULANT
உமில்நீர்பெருக்கி --- SIALOGAGUE
தடிப்புண்டாக்கி ------ RUBEFACIENT



பொதுகுனம் :-- இதனால் பயங்கரமான காலதோடம் (வாததோடம்) தாகசுரம் நீங்கும் இதை வாயிலிட்டு அடக்கிக் கொண்டு சுவைத்து வர நாவரட்சி, நீங்கி உமிழ் நீர் சுரக்கும்.
பாடல் –
அக்கரகாரம் அதன்பேர் உரைத்தக்கால்
உக்கிரகால அத்தோட்டம் ஒடுங்கான் – முக்கியமாய்க்
கொண்டால் சலம் ஊரும் கொம்பனையே! தாகசுரம்
கண்டால் பயன்தோடுங்கான்
                                                  ------ அகத்தியர் குணவாகடம்
அக்கராக் காரஞ்செய்யுமடவிது தன்னைக் கேளாய்
விக்கலுந் தட்ப்பு மாற்றும் மிடறுகள் பாடிவிக்குங்
காக்குமா ரோசிக கங்கலடி நவதோஷம் போக்கும்
இப்படிக் கொள்வதற்கு இதமுடன் சொன்னாரிதே
அக்கிரா காரத்தை ஆரறியப் போனார்கான்
உக்கிரகா லத்தோஷ மோடுமே – திக்குமொழி
கொண்டதற்கு நாத்திரும்பும் கொம்பனையே !கேளீர்
கண்டார்க்கு தோடமில்லை
                                                            --- ஏடு
       இதனை பல்வலி, உண்ணாக்கு வளர்ச்சி, தொண்டைக் கம்மல் நாக்கு அசைவற்று போதல், கீல்வாதம், சந்நிதோடம் இவைகள் நீங்கும்.
பயன்பாடு – பல்வலி, உன்னாக்கு வளர்ச்சி, தொண்டைக் கம்மல், சுரத்தினால் ஏற்படும் வரட்சி, போன்ற நிலைகளில் இதன் சிறிய துண்டை எடுத்து வாயில் போட்டு மென்று வருவதாலும் அல்லது அக்கிராகரத்தை ஊறவைத்து கசாயம் செய்த நீரை வாய் கொப்பளித்து வருவதாலும் நீங்கும்.
       இதன் தனிச் சூரணத்தை மூக்கில் நசியமிட காக்கைவலி (கால்கை வலிப்பு) சாந்தமாகும்.
அக்கரகாரம் -------- -- 50 gm
சுக்கு ------------ ----------  50 gm
திப்பிலி ------ ----- ----  50 gm
செஞ்சந்தனம் -- ----  50 gm
கிராம்பு ----- ----- -----  50 gm
சாதிக்காய் ---- -------  50 gm
குங்குமப்பூ ---- ------  50 gm
அபின் --- --- --- ------ 25 gm   
இவையாவும் சூரணித்து மொத்த எடைக்கு சீனி அல்லது நாட்டுச்சர்க்கரை கலந்து வைத்துக் கொண்டு காலை மாலை 2-3 குன்றி மணி அளவு உட்கொள்ள வயிற்று நோய்கள், நரம்புத்தளர்ச்சி நீங்கும்.
மற்றும் இதைக் கொண்டு கண்டாவுடதம் என்னும் மருந்து சித்த மருத்துவர்கள் செய்து உபயோகிப்பர் அது வருமாறு.
அக்கராகாரம் --- -- 50 gm
அதிமதுரம் -- ------- 50 gm
சிற்றரத்தை ----- --- 50 gm
சுக்கு ------ ------ ------ 50 gm  
                 இவைகளைச் சூரணித்து பசும் பால் விட்டு அரைத்து எடுத்துக் கொண்டு இதன் அளவு பேரிச்சம் பழத்தை பாலில் வேகவைத்து அரைத்து விழுது போல் எடுத்துக் கொண்டு முன் அரைத்த மருந்து விழுது கலந்து சிறிது தேன் விட்டு அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். இதனைக் சுரம், சன்னி, இவற்றில் கானும் நாக்கு வரட்சிக்கு ஒரு விரலால் எடுத்து நாக்கில் தடவிவர நீங்கும். நாக்கில் நீர் சுரக்கும். மேற்கண்ட நிலைகளில் வாந்தி இருந்தால் மயிலிறகைச் சுட்ட சாம்பலைக் கலந்து கொள்ளவும். மலபந்தம் இருந்தால் கடுக்காய் சூரணத்தை சேர்த்துக் கொள்ளவும். அதிக மலப்போக்கு இருந்தால் மாச்சாக்காய் சூரணத்தை சேர்த்துக் கொள்ளவும். சிறுநீர் கட்டு இருந்தால் வெங்காரம் வறுத்தோ அல்லது பற்பமோ  சேர்த்துக் கொடுக்கவும். மற்றும் இதனுடன் தங்கம், வெள்ளி, நல்லமுத்து, நற்பவழம், மான்கொம்பு, ருத்திரட்சம், கஸ்த்தூரி, குங்குமப்பூ சேர்த்தும் கொடுக்கலாம்.

அக்கரகாரப் பட்டை – AKARAKARAP PATTAI :--
சுவை – கார்ப்பு, வீரியம் – வெப்பம், பிரிவு – கார்ப்பு
செயல் –
பசித்தூண்டி -- ---- --- STOMACHIC
வெப்பமுண்டாக்கி STIMULANT
உமிழ் நீர் பெருக்கி – SIALAGOGUE
தடிப்புண்டக்கி ---------- RUBEFACIENT
உடல்தேற்றி ------ ----- ALTERATIVE   
பொது குணம் :--
       அக்காரப் பட்டிக்கு தாகம் நாவரட்ச்சி,சுரம், சந்நிபாதம், திரிதோட தலைவலி வாத கோபம், உத்திர நாற்றம் நீங்கும்.
பாடல் –
அக்காரப் பட்டிக்கு கறல்நா வரட்சிகளும்
எக்கு சந்நி பாதசுரம் என்பவையும் – பக்கச்
சகல தலை நோய்வாய்வுந் தாழ்ந்தே யொழியும்
புகலிரத்த கந்தமது போம்
                                               ------ அகத்தியர் குணவாகடம்
       அக்காரப் பட்டயைச் சூரனஞ்செய்து, நான்கில் ஒன்றுக்கு அரை முதல் இரண்டு டீஸ்பூன் வரை சூரணத்துடன் நாட்டுச்சர்க்கரை அல்லது தேன் கலந்து  சாப்பிட்டு வர மேற்கண்ட நோய்கள் தீரும். அல்லது இந்த சூரணம் 35 gm எடுத்து மூன்னூறு மில்லி நீர் விட்டு கொதிக்க வைத்து பாதியாக குறுக்கி தரலாம்.
குறிப்பு – இந்த மருந்து நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்

Comments

Popular posts from this blog

அ - வரிசை - அகில்

இ - வரிசை - இலவங்கப்பட்டை

இ - வரிசை - இலவமரம்