அ - வரிசை அதிமதுரம்

அதிமதுரம் – ATIMATHURAM :--



















வேறு பெயர் – அதிங்கம் அட்டி (யஷ்டி) மதூகம் குன்றிவேர்
ஆங்கிலப் பெயர்JEQUIRTY, INDIAN (OR) JAMAICA LIQUORICE
தாவரவியல் பெயர்ABRUS PRECATORIOUS, GLYCERRHIZE RADIX
       இது மலைகளில் பயிராகும் குன்றிமணியின் வேராகும். இது சிறிதும் பெரிதுமாய், மஞ்சள் நிறமுள்ளதாய், வெளிப்புறத்தில் மரக் கலராயிருக்கும். பெரும்பாலும் வென்குன்றியின் வேரே பயன் படுகிறது. இதன் விதைகள், கருப்பு, வெள்ளை, சிவப்பு, கருப்பு+சிவப்பு நிறங்களில் உள்ளது. இதற்கு பதிலாக மற்ற குன்றிமனிகளின் வேர்களையும் உபயோகிப்பது உண்டு.
பயன்படும் பாகங்கள் :-- இலை, வேர், பால், விதை.
இலைசுவை – இனிப்பு கைப்பு, வீரியம் – வெப்பம், பிரிவு – கார்ப்பு.
வேர்சுவை – இனிப்பு, வீரியம் – சீதம், பிரிவு – இனிப்பு
விதைசுவை – கைப்பு,  வீரியம் – வெப்பம், பிரிவு –கார்ப்பு
பால் சுவை – இனிப்பு, வீரியம் – சீதம், பிரிவு - இனிப்பு.
செயல் – வரட்சியகற்றிEMOLLIENT
         உள்ளழலாற்றிDEMULCENT
         கோழையகற்றிEXPECTORANT
         மலமிளக்கி -------- LAXATIVE
பொது குணம் :-  வெறுக்கும், பாலுக்கும் ஒரே குணம் உண்டு. இதனால் திரிதோடப்புண், தாகம், கண்நோய், உன்மாதம், விக்கல், வலி, வெண்குட்டம், பித்தம், எலும்புருக்கி, கிரிச்சரம், ஆவர்த்த பித்தம், மதமூர்ச்சை, விடபாகம், வெப்பு, வாதசோணிதம், காமாலை, சர்வவிடம், காமிய நோய் தாதுநட்டம், சோபரோகம், இதழ் நோய், ஆசியநோய், குத்திருமல், குய்யப்புன், சிரநோய், வாய்வு, முலை விப்புருதி, வெட்டுக்காயப்புன், முதலிய நோய்கள் போகும், ஆனால் நீர்க்காய், மண்ணீரலுக்கு ஆகாது.
பாடல் ---
கத்தியரி முப்பிணியால் வருபுன் தாகங்
கண்நோய் உண்மாதம் விக்கல் வலிவென்குட்டம்
பித்தம் எலும்புருக்கி கிரிச்சரம் ஆவர்த்த
பித்த மத மூர்ச்சை விடபாகம் வெப்பந்
தத்திவரு வாத சோனிதங்கா மாலை
சருவவிடங் காமிய நோய் தாது நட்டம்
குத்திருமல் ஆசியங்கம் இதழ்நோய் இந்து
குய்யப்புண் போம் மதஊக மெனக் கூறும் காலே
                                               ------ தேரையர் குணவாகடம்
தித்திக்கும் மதிமதுரக் குணத்தை எடுத்துரைக்கில்
சிரமயக்கம்ஞ் சுரதாகாந் திரிதோடங்கள்
பித்தஞ்சத் திக்குமிது குணமா மதுர தீபனமாந்
தாதுவுட்டினாமுந் தவிர்க்கும் விழிக்தமாம்
புத்திக்கு வித்தாகுஞ் சந்தாபந்தீர்க்கும்
புகைந்தெடுக்குஞ் சேட்மத்தைப் பித்தரோகத்தை
அத்திப் பற்றின மேகந் தன்னைவா தத்தினை
அதிமதுரம் பேரீந்துக் காண குணம்நீ கேளிர்
கொதிமருவாப் பித்தங் குருகுமே – ததிமருவாய்
நீரதுவும் முண்டாகும் நிலையாத தாபம் போம்
பாரறியச் சொன்னோம் பகர்ந்து
                                                    ---- ஏடு
இந்த அதிமதுரத்தில் தனியாகச் சத்து எடுத்து வைத்துக் கொண்டு சித்த மருத்துவர்கள் தங்கள் தேவைக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்வார்கள் அது வருமாறு ---


















அதிமதுரச் சத்து செய்யும் முறை --- அதிமதுரம் - 350gm  நீர் - 1500ml எடுத்து அதிமதுரத்தை ஒன்றிரண்டாக பொடித்து ஒரு பாத்திரத்தில் போட்டு மேற்கண்ட அளவு நீர் விட்டு - 12 மணிநேரம் ஊறவைத்து வடிகட்டிக் கொள்ளவும் பின் மீண்டும் 300 ml நீர் கொதிக்க வைத்து அந்தச் சக்கையில் விட்டு முன்போல் ஊறவைத்து வைகட்டி எடுத்துக் கொளவும்.முன் எடுத்தது யாவும் ஒன்றாகக் கலந்து அடுப்பில்வைத்து சுண்ட வைத்து எடுத்து பின் நீர் சுடுமாறு வெய்யிலில் வைத்து காய வைத்து எடுத்துக் கொள்ளவும்
அளவு 500 mg முதல் 1500 mg வரை
மற்றும் இந்த சத்தை மூசாம்பரம், நிலவாகையை கொண்டு செய்கிற மருந்துகளில் அருவருப்பை நீக்க சேர்த்துக் கொள்ளலாம். அவற்றின் குணம் மாறாது.
தேகத்தில் உண்டாகும் உஷ்ணத்தை குறைக்க தனியாக அதிமதுரம் 15 gm எடுத்து இடித்து வெந்நீரில் கலக்கி வைத்து சிறிது நேரம் கழித்து வடிகட்டி காலை மாலை சாப்பிடலாம்.
உஷ்ண வறட்டு இருமலுக்கு –
அதிமதுரம் --- 50 gm
கடுக்காய் ------ 50 gm
மிளகு -- --- --- 50 gm  
       இவைகளை சம அளவு எடுத்து பொடி செய்து கொண்டு அதில் இருந்து 500 mg முதல் 1500 mg வரை தேனில் குழைத்து கொடுக்க வறட்டு இருமல் தீரும்.
மஞ்சள் காமாலைக்கு ---
       அதிமதுரம் – முட்சங்கன் வேர் பட்டை இரண்டையும் சம எடை எடுத்துக் கொண்டு மூன்று நாள் எலுமிச்சம்பழசார் விட்டு அரைத்து மெழுகு பதத்தில் ஒரு இலந்தைப் பழ அளவு அல்லது 1000 mg – 1500 mg அளவு எடுத்துக் உருட்டி குளிகை போல் செய்து வெய்யிலில் உலர்த்தி எடுத்து வைத்துக் கொண்டு காலை – மாலை இரண்டு வேளை பாலில் அல்லது மோரில் கொடுத்து வரலாம்.
 கற்பமான பெண்களுக்கு இரத்தப்போக்கு கண்டால் :--
       அதிமதுரம், சீரகம் வகைக்கு 15 gm எடுத்து ஒன்றிரண்டாக இடித்து தூள் செய்து 300ml நீர் விட்டு  150 ml அளவாக குறுக்கி காய்ச்சி எடுத்துக் கொண்டு, காலை, மாலை  3 or  4 நாள் கொடுக்கலாம்.
வயிற்றில் இறந்த பிள்ளை வெளியேற –
       அதிமதுரம் 35 gm தேவதாறுக் கட்டை 35 gm எடுத்து ஒன்று இரண்டாக இடித்து தூள் செய்து கொண்டு 15gm அளவு வெண்ணீரில் கலக்கி கொடுக்கலாம்.
பேதியாக –
       அதிமதுரம் 100gm திராட்சை உப்பு 30gm (tartaric acid)  சேர்த்து பொடித்து 1/2 லிட்டர் நீர் விட்டு நான்கில் ஒரு பாகமாக சுண்டவைத்து கொடுக்கலாம்.
இலை –
       இதன் இலையை அரைத்து உடலில் பூசிவர உடலிலும், அக்குள்களிலும் உண்டாகும் துர்வாசனை, படை சொறி நீங்கும்.
பிடிப்பு சுளுக்கு – உண்டானால் அவ்விடங்களில் சிற்றாமணக்கு நெய் இலேசாக தடவி குன்றிமணி இலைகளை உருவி அதன் மேல் ஒட்டவைக்க குணமாகும்,வலி குறையும்.
அதிமதுர லேகியம் :--
அதிமதுரம் -------- 65 gm  ( சூரணம் செய்து கொள்ளவும் )
பசும்பால் ----------- 200ml
பசுநெய் -------------- 200 ml  
நாட்ச்சர்க்கரை -- 200 gm  
       இவைகளில் பாலில் சர்க்கரையை கரைத்து வடிகட்டிக் அடுப்பில் வைத்து காய்ச்சி கம்பி பதத்தில் அதிமதுரச் சூரணத்தை அதில் தூவிக் கிளறி பின் நெய் விட்டுக் கிளறி எடுத்து வைத்துக் கொண்டு வயிற்றுப்புண் வயிறு எரிச்சல் மூலத்தில் இரத்தம் வருதல் போன்றோ நோய்க்கு கொடுக்கலாம்.
அதிமதுரச் சூரணம் :--
அதிமதுரம் ------------------------  35 gm
சோம்பு -------------------------------- 35 gm
கொடிவேலிவேர்பட்டை ---   18 gm
                இவைகளை சூரணித்து வைத்துக் கொண்டு சித்தரை மாதம் முதல் ஆடி மாதம் வரை ஒன்று முதல் மூன்று கிராம் வரை சாப்பிட்டுவர பல நோய்கள் அணுகாது, தலைவலி, ஒற்றத் தலைவலி, சுரம் தீரும்.
வறட்சி தோஷம் தீர --- அதிமதுரம் சூரணம் 35 gm கிராம், ஈய பற்பம் 3.5 gm  எடுத்து தேன்விட்டு மெழுகு பதமாக அரைத்து எடுத்து வைத்துக் கொண்டு, சிறிது சிறிதாக எடுத்து அடிக்கடி நாக்கில் தடவி வர தோஷங்கள் தீரும்.
அதிக இருமல் இருப்பின் அதிமதுரத் துண்டை சிறிது எடுத்து வாயில் போட்டு சுவைத்து அந்த உமிழ் நீரை விழுங்கி வர இருமல் தனியும்.   
          

  இது நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.    

Comments

Popular posts from this blog

அ - வரிசை - அகில்

இ - வரிசை - இலவங்கப்பட்டை

இ - வரிசை - இலவமரம்