அ - வரிசை - அரிசித்திப்பிலி

அரிசித்திப்பிலி :--















இதன் வேறு பெயர்கள் --- ஆர்கதி, உன்சாரம், உலவைநாசி, காமன், குடோரி, கோலகம், கோழி, கோலையறுக்கி, சரம், சஷ்டி, துலவி, மாகதி, கணை, சொளண்டி தண்டுலி, கணம், கலினி, பானம், பிப்பிலி, வைதேகி, அம்பு, ஆதிமருந்து.
தாவரவியல் பெயர்piper longum, - chavica rox burghi
ஆங்கிலப் பெயர்    - long pepper
தெலுங்கு பெயர்    - பிபில்லு
மலையாள பெயர்   - திப்பிலி
கன்னட பெயர்      - ஹிப்பிலி
சமஸ்கிருத பெயர்  - பிப்பாலி
       இத்தாவரம் கொடியாக வளரக் கூடியது. இது தென்னிந்தியாவில் உண்டு, வங்காளத்தில் இதன் பழத்திற்காக பயிரிட்டு வளர்க்கிறார்கள். இதன் காரத்தன்மை அதிகம் நாவில் நமைச்சலை உண்டாக்கும், இதில் இரண்டு பிரிவு உண்டு ஒன்று அரிசித்திப்பிலி – இன்னொன்று ஆனைத்திப்பிலி
குணம் – சுவை இனிப்பு, காரம் திப்பிலிக் கொடியின் உலர்ந்த பழங்களே மருத்துவத்தில் அதிகம் பயன் படுகிறது. இது கடைச்சரக்குகளில் ஒன்று.
செயல் வெப்பமுண்டாக்கி stimulant,  அகட்டுவாய்வகற்றிcarminative
 இருமல் குன்மம் இரைப்பு கயப்பிணி
ஈளை பாண்டு சந்நியாசம் அரோசகம்
பொருமல் ஊதை சிரப்பினி மூர்ச்சைநோய்
பூரிக்குஞ்சல தோட்டம் பீலிகமும்
வருமலப் பெருக்கோடு மகோதரம்
தம் ஆத்திமுத் தோடஞ் சுரங்குளிர் 
பொருமலைபுவாரி மேகப் பிடகம்
பெருந்திப்பிலி பேரங் குறைக்கவே
                                                ---- அகத்தியர் குணவாகடம்
ஆசனநோய் தொண்டை நோய்ஆவரண பித்தமுதல்
நாசிவிழி காத்திவை நோய் நாட்புழு நோய் – வீசிடுவி
யங்கலாகஞ்ச னஞ்சிதையும் அம்பாய அழி விந்தும்
பொங்லாஞ் நங்கையர் கோடி போல்
                                                  ---- தேரையர் குணவாகடம்
திப்பிலியின் றண்டுலஞ் சிலேத்துமத்தைப் போக்கிவிடும்
உப்பிசத்தை மேகத்தை ஒட்டுங்கான் – தப்பாமல்
வாத சுரந்தணிக்கும் மாகபரோக ந்தொலைக்கும்
தாதுவை வளரப் பிக்குஞ் சாற்று
                                                  ---- அகத்தியர் குணவாகடம்
மருத்துவ குணம் :-- இருமல், குன்மம், இரைப்பு, சயப்பிணி, ஈளை, பாண்டு, சஞ்நியாசம் அரோசகம் பொருமல், தலைவலி, மூர்ச்சை, சலதோட்டம், பீலிகம், மலப்பெருக்கு, மகோதரம், முத்தோடம், குளிர்சுரம், மேகக்கட்டி, ஆசனநோய், தொண்டைநோய், ஆவரனபித்தம், நாசி- காது – கண் – நோய், இருமல் நோய், வியங்காஆஞ்சணம், ஆகிய நோய் நீங்கும், நீர்த்த விந்து இருகும்
இனி இதைக் கொண்டு செய்யப்படும் சில மருந்துகளைப் பார்ப்போம் :--
     



கரிசலாங்கண்ணி



அரிசி திப்பிலி
அரிசித்திப்பிலி --- 100 கிராம்
கரிசாலை பொடி – 50 கிராம்
செய்முறை கரிசாலையை நிழலில் உலர்த்தி மேற்கண்ட எடை எடுத்துக் கொள்ளவும் அது போல் திப்பிலியை பொடி செய்து மேற்கண்ட அளவு எடுத்துக் கொள்ளவும். இப் பொடிக்கு சமன் அளவு அரிசியை வறுத்து பொறித்து எடுத்து சூரணித்து சேர்த்துக் கொள்ளவும் இவற்றிற்கு சமன் சீனி பொடித்து சேர்த்துக் கொள்ளவும்  

உபயோகம் – இதை தினசரி இரண்டு டீஸ்பூன் அளவு சாப்பிட்டு வெந்நீர் குடித்துவரவும் இதானால் இளைப்பு, ஈளை, காசம், கபநோய், உத்தரவாய்வு, முதலியன தீரும்.
வேறு முறை :----
   தேத்தான் கோட்டை ---- 30 gm
   திப்பிலி --------------------------- 50 gm ==== இவை இரண்டையும் இடித்து  தூள் செய்து வைத்துக் கொண்டு ஒரு டேபிள்ஸ்பூன் அளவு அரிசிக் கழுநீரில் மூன்று நாள் காலை தோறும் உணவுக்கு முன் கொடுத்துவர கிழ்க்கண்ட நோய்கள் குணமாகும்
பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் அதிகம் போகுதல் வெள்ளை படுதல் குணமாகும்
வேறு முறை :---

 கடுக்காய் ---------------- 105 gm        
 அரிசித்திப்பிலி -------- 80 gm
          அரிசித்திப்பிலி + கடுக்காய் இரண்டையும் பொடித்து வைத்துக் கொண்டு தினம் இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்து தேனில் கொடுத்து வரவும் இதனால் சளி வறட்டு இருமல் தும்மல் நீர்வடிதல் தீரும்.
வேறுமுறை ;---  
திப்பிலியை தனியாகச் சூரணம் செய்து வைத்துக் கொண்டு அதில் இருந்து இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்துக் கொண்டு கம்மாறு வெற்றிலைச்சாறு மேற்படி அளவும் தேன் சம அளவும் விட்டு கலந்து சாப்பிட்டுவர கபம் கோழைக்கட்டு இருமல் கபசுரம் தீரும். இதையே கீழ்க்கண்ட வாறும் செய்து வைத்துக் கொள்ளலாம் 200 gm எடுத்துக் கொண்டு சுத்தம் செய்து கொண்டு ஒரு பீங்கானில் போட்டு அது மூழ்கும் அளவு வெற்றிலைச்சாறு விட்டு உலர்த்தி எடுத்துக் கொள்ளவும் இது போல் ஐந்து முறை செய்து எடுத்துக் கொண்டு சூரணித்து வைத்துக் கொள்ளவும்
தனி திப்பிலிச் சூரணத்தை கால் படி பசுவின் பாலில் ஒரு டேபிள்ஸ்பூன் அளவு பொடித்துப் போட்டு காய்ச்சி வடிக்கட்டி குடித்துவர கபக்கட்டுக்கள் நீங்கும்

திப்பிலிச் சூரணம் :--















திப்பிலி ---------------------- 200 gm
மிளகு ------------------------- 100 gm
சுக்கு --------------------------- 100 gm
சீரகம் -------------------------- 40 gm
கருஞ்சீரகம் --------------- 40 gm
சித்தரத்தை ---------------- 40 gm 
இலவங்கப்பட்டை ---- 20 gm
ஓமம் -------------------------- 40 gm
தாளீசபத்திரி -------------- 20 gm
இலவங்கப் பத்திரி --- 20 gm
திரிபலை --------------------  20 gm
கிராம்பு ---------------------- -20 gm
ஏலம் -------------------------- 20 gm
சித்தரமூலபட்டை ---- 20 gm   இம் மருந்துகளை தமிழ் மருந்துக் கடைகளில் விற்கும் வாங்கி சுத்தம் செய்து உலர்த்தி இளம் வறுப்பாக வறுத்துக்கொண்டு சூரணித்து சமன் அளவு சீனி பொடித்துச் சேர்த்துக் கொண்டு ஒரு ஜாரில் போட்டுவைத்துக் கொள்ளவும் இதை நோயாளியின் வயதைப் பொறுத்து ஒரு டீஸ்பூன் முதல் மூன்று டீஸ்பூன் அளவு எடுத்து தேன், நெய், போன்றவற்றில் அனுப்பானித்து கொடுத்துவர இளைப்பு, ஈளை, காசம், கபநோய்கள் 96 உத்திர வாயு பசியின்மை, தீர்ந்து நலம் பயக்கும். இதை பாதியாக அல்லது கால் பாகமாக குறைத்துச் செய்து கொள்ளலாம்.
வேறு திப்பிலி லேகியம்  :--
திப்பிலி ------------------- 100 gm
சீரகம் ----------------------- 10 gm
சுக்கு ------------------------ 10 gm
ஏலம் ----------------------- 10 gm
திப்பிலி மூலம் ----- 10 gm
வாய்விடங்கம் ------  10 gm
மிளகு --------------------- 10 gm
கடுக்காய் தோல் --  10 gm
       இம் மருந்துகளை வாங்கி சுத்தம் செய்து உலர்த்தி இளம் வறுப்பாக வறுத்து பொடித்து வைத்துக் கொண்டு மொத்த எடைக்கு மூன்று மடங்கு கருப்பட்டி எடுத்து பாகு காய்ச்சி கம்பிபதத்தில் நெய் நூற்று ஐம்பது கிராம் விட்டு பொடியைப் போட்டு கிளறி நூறு தேன் விட்டு கிண்டி எடுத்துக் கொளவும் இதில் ஒரு டேபிள்ஸ்பூன் அளவு சாப்பிட்டுவர கலை, மாலையாக சயரோகம், சோகை, குத்திருமல், ஈளை, நீண்டநாள் இருமல், காசம் இளைப்பு கிறுகிறுப்பு, பித்தவரட்சி தீரும்.

பாவனத்திப்பிலி :-- 200 gm – திப்பிலி வாங்கி சுத்தம் சேது ஒரு பீங்கானில் போட்டு அது மூழ்கு அளவு கரிசாலைச் சார் விட்டு உலர்த்தவும் பின் இது போல் வல்லாரை, முசுமுசுக்கை, இஞ்சி, எலுமிச்சம் பழச்சார் இவற்றில் ஒவ்வொருநாள் விட்டு உலர்த்தி எடுத்துக் கொண்டு பொடித்து வைத்துக் கொண்டு ஒரு டீஸ்பூன் முதல் மூன்று டீஸ்பூன் வரை எடுத்து தேனில் அல்லது நெய்யில் கலந்து சாப்பிடவும் இதையே மேற்கண்ட சூரணத்தில் வெறும் திப்பிலிக்கு பதிலாக இந்த பாவனைத் திப்பிலி சேர்த்துக் கொள்ள மிகுந்த நன்மை பயக்கும் வறட்டு இருமல் கோழை கட்டிக்கொண்டு நெஞ்சில் கர்மூர் என்ற சப்தம் வருதல் போன்ற நிலைகளை நீக்கி நன்மை பயக்கும்.  

Comments

Popular posts from this blog

அ - வரிசை - அகில்

இ - வரிசை - இலவங்கப்பட்டை

இ - வரிசை - இலவமரம்