அ - வரிசை அத்தி பழம்

அத்தி பழம் – ATTI FRUT :---

















வேறு பெயர் – அதம், அதவு, உதும்பரம், கோளி, சுப்பிரதஷ்டம்.
ஆங்கிலப்பெயர் – COUNTRY FIG
தாவரவியல் பெயர் – FICUS GLOMER (OR) FICUS RASEMOSA WALL
       இது மர வகுப்பைச் சேர்ந்தது. இந்தியாவில் எங்கும் பயிராகிறது. இதன் காய் உருண்டையையும் பச்சை நிறமாயும் வழவழப்புடன் இருக்கும், மினு மினுப்பாகவும் அடிப்பக்கத்தில் சிறிது குவிழ்ந்து இருக்கும். மத்தியல் சிறு துவாரமும் சுற்றி செந்நிறக் கோடுகளும் இருக்கும். பழுத்தவுடன் செங்கல் நிறமாக மாறும்.அதனுள் சிறு விதைகளும் பூச்சிகளும் அடங்கியிருக்கும்.
சுவை – இனிப்பு, வீரியம் – சீதம், பிரிவு – இனிப்பு
செயல் – குருதி பெருக்கி ---- ( improves blood) cordial
         மலமிளக்கி ----------- laxative   
குணம் – இரத்தத்தை அதிகரிக்கச் செய்யும், மலத்தைக் வெளியேற்றும்.
சீமை அத்தி ஓர் தேன் அத்தி – SEEMAI ATHI
ஆங்கிலப்பெயர் – fig
தாவரவியல் பெயர் – ficus palmats forsk (or) ficus caria – lim  
       இது சிறு மர வகுப்பை சேர்ந்தது ஒருவகை அத்தி பதினைந்து முதல் முப்பது அடி உயரம் வரை வளரும்.இது முதன் முதலில் சிரியா ஆசியா (ASIYAA MINOR) விலிருந்து மற்ற நாடுகளுக்கு கொண்டுபோய் வளர்க்கப்பட்டது. இப்பொழுது வடமேற்கு இந்தியாவில் ஏராளமாய் வளர்க்கப்படுகிறது. இத்தாலி, துருக்கி முதலிய நாடுகளில் இதன் பழத்தை உணவுப் பொருளாக கொள்கிறார்கள்.
       








இது வருடத்திற்கு இரண்டு முறை காய்த்து பலன் தரும். மேல் நாட்டுப் பயிராகும் மரத்தின் பழம் நம் நாட்டு பழங்களைவிட தசைபகுதி அதிகமாக இருக்கும். மென்மையும் பிசுபிசுப்பும் உள்ளது விடை குறைவு அதிக சுவை மங்கலான செங்கல் நிறம் உடையது.
பயன்பாடு ---- பால், பழம்
சுவை – இனிப்பு, வீரியம்சீதம், பிரிவுஇனிப்பு
செயல்பால்உள்ளழலாற்றி – demulcent
          பழம் – உள்ளழலாற்றிdemulcent
                 வரட்சியகற்றி --- emollient
                 உடலுரமாக்கி --- nutrient
                 மலமிளக்கி ------- laxative
                 உரமாக்கி ---------- tonic    
மருத்துவ குணம் – மேகப் படை, அக்கரம் இவைகளுக்கு பாலைத் தடவிவர நீங்கும்.
பழம் – படுக்கைக்கு போகும் முன் 2, 3, பழங்களைச் சாப்பிட்டு வர மலபந்தம் தீரும். உடல் குளிரும், இரத்த விருத்தி உண்டாகும்.

இது நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.  

Comments

Popular posts from this blog

அ - வரிசை - அகில்

இ - வரிசை - இலவங்கப்பட்டை

இ - வரிசை - இலவமரம்