ஆ -வரிசை - ஆளிவிதை

ஆளிவிதை – ALIVITHAI 














வேறு பெயர்ஆளிவிதை
தாவரவியல் பெயர்LEPIDIUM SATIVAM
இது இந்தியாவில் பயிரிடப்படுகிறது.
இதன் உபயோகப் பகுதி – இலை , பூ, விதை வேர்
இலை செயல் – வெப்பமுண்டாக்கி STIMULANT
                சிறுநீர் பெருக்கி ---- DIURETIC  
குணம் – உடலுக்கு வன்மை தரும், நீர்க்கட்டை உடைத்து நீரை வெளியேற்றும்
பூ – செயல்உரமாக்கிTONIC
குணம் – இளைத்த உடலுக்கு பலத்தை உண்டாக்கும். இனிப்பு பதார்த்தங்களில் இதனை மேல் தூவி சாப்பிடலாம்
விதை – செயல் – உடல் தேற்றி ---------- ALTERATIVE 
                                            மலமிளக்கி ------------- APERIENT
                                           காமம் பெருக்கி ------- APHRODISIAC
                 அகட்டுவாய்வகற்றிCARMINATIVE
                 உள்ளழாற்றி ------------- DEMULCENT
                 சிறுநீர் பெருக்கி -------- DIURETIC
                 ருதுவுண்டாக்கி --------- EMMENAGOGUL
                 பால் பெருக்கி ----------- GALACTAGOGUE  
குணம் – அசீரணம், சீதபேதி, இடப்பாட்டீரல் (மண்ணீரல்) வீக்கம், வயிற்றுப் பொருமல், விக்கல் சருமரோகம், கபநோய், குசுமரோகம்,(வெள்ளைபடுதல்) மூலம், பெண்களுக்கு பாலைச் சுரப்பிக்கும், ஆரம்ப கருவை கலைக்கும், நீரை வெளிப்படுத்தும் சுக்கில விருத்திக்கும்,  மலத்தை தள்ளும், உட்சூட்டை தணிக்கும்.
பாடல் : --
வீக்கம் அதிவாந்தி னேனி வலி வாய்வுந்
தூக்கு நரம் பின்குத்தல் தொல்லழலை – ஒக்காளம்
மீளியருசி விதை வாதமும் போகும்
ஆளிவிதை தன்னால் அறி
                                                  --- அகத்தியர் குணவாகடம்
மருத்துவ குணம்
       மேற்கண்ட குணங்களைப் பெற ஒருபங்கு விதைப் பொடிக்கு இருபது பங்கு நீர் சேர்த்து கொதிக்க வைத்து குடிநீராக்கி அல்லது ஒரு பங்கு விதைப் பொடிக்கு பத்துப்பங்கு குளிர்ந்த நீரில் வைத்தாகிலும் எடுத்த நீரை 100 ml to 150ml வீதம் நாள் ஒன்றுக்கு இரண்டு முறை குடித்துவரவும்.
       ஒரு பங்கு பொடி செய்த விதையை எட்டுப் பங்கு நீரில் கொதிக்க வைத்து 50ml வீதம் அடிக்கடி குடித்து வர விக்கல் தீரும்.
       விதையை பொடித்து பாலில் போட்டு சாப்பிட்டு வர தாய்மார்களுக்கு பாலைச் சுரப்பிக்கும்.
       விதியின் சூரனத்தைச் பொடித்து அதன் சமளவு சீனி அல்லது கல்கண்டு சேர்த்து சாப்பிட்டு வர அஜீரண பேதி, சீதபேதி, அசீரணம் தீரும். இதே பொடியை ஒரு பங்குக்கு இரண்டு பங்கு நாட்டுச்சர்க்கரை பாகு செய்து அதில் பொடி போட்டு தேவையான் அளவு தேன் நெய் விட்டு கிளறி லேகியம் போல் எடுத்து வைத்துக் கொண்டு சாப்பிட்டு வர மேல் படி குணம் தரும் வயிற்றுப் பொருமல், பாலை சுரப்பிக்கும், சுக்கிலத்தைப் பேருக்கும் வெள்ளை படுதல், இடுப்புவலி தீரும். வாத வலிகளுக்கு எலுமிச்சம் பழச்சார் விட்டு அரைத்து பத்துப் போடலாம். மற்றும் மருத்துவர்கள் தாங்கள் அனுபவத்திற்கு ஏற்ப மற்ற மருந்துகளிலும் கலந்து கொடுக்கலாம் மேகப்படைகளுக்கு ஆசனக் கடுப்பிற்கு இதன் வேறை பற்றுப் போடலாம்.
இது நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.  

Comments

Popular posts from this blog

அ - வரிசை - அகில்

இ - வரிசை - இலவங்கப்பட்டை

இ - வரிசை - இலவமரம்