Posts

Showing posts from August 30, 2014

அ - வரிசை அதிமதுரம்

Image
அதிமதுரம் – ATIMATHURAM :-- வேறு பெயர் – அதிங்கம் அட்டி (யஷ்டி) மதூகம் குன்றிவேர் ஆங்கிலப் பெயர் – JEQUIRTY, INDIAN (OR) JAMAICA LIQUORICE தாவரவியல் பெயர் – ABRUS PRECATORIOUS, GLYCERRHIZE RADIX        இது மலைகளில் பயிராகும் குன்றிமணியின் வேராகும். இது சிறிதும் பெரிதுமாய், மஞ்சள் நிறமுள்ளதாய், வெளிப்புறத்தில் மரக் கலராயிருக்கும். பெரும்பாலும் வென்குன்றியின் வேரே பயன் படுகிறது. இதன் விதைகள், கருப்பு, வெள்ளை, சிவப்பு, கருப்பு+சிவப்பு நிறங்களில் உள்ளது. இதற்கு பதிலாக மற்ற குன்றிமனிகளின் வேர்களையும் உபயோகிப்பது உண்டு. பயன்படும் பாகங்கள் :-- இலை, வேர், பால், விதை. இலை – சுவை – இனிப்பு கைப்பு, வீரியம் – வெப்பம், பிரிவு – கார்ப்பு. வேர் – சுவை – இனிப்பு, வீரியம் – சீதம், பிரிவு – இனிப்பு விதை – சுவை – கைப்பு,  வீரியம் – வெப்பம், பிரிவு –கார்ப்பு பால் – சுவை – இனிப்பு, வீரியம் – சீதம், பிரிவு - இனிப்பு . செயல் – வரட்சியகற்றி – EMOLLIENT          உள்ளழலாற்றி – DEMULCENT          கோழையகற்றி – EXPECTORANT          மலம