Posts

Showing posts from September 4, 2014

அ -வரிசை - அமுக்குரா

Image
அமுக்கரா என்னும் அஸ்வகந்தா :---        இது மனித இனத்திற்கு கிடைத்த ஒரு மிகச் சிறந்த மூலிகையாக கருதப்படுகிறது. நம் சித்த மருத்துவத்தில் தமிழக வழக்குப்படி அமுக்குரா என்றும், சம்ஸ்கிருத மொழி வழக்குப்படி அஸ்வகந்தா என்றும், ஆங்கிலத்தில் விண்டர் செரி ( winter cherry )  என்றும் தாவர இயல் பெயராக விதானியா சோமணி பிரா   withania somnifera என்றும் வழங்கப் படுகிறது.        இது இந்தியாவின் மேட்டுப்பாங்கான இடங்களில் பெலுச்சிஸ்தானத்திலும் பயிராகும்  செடி வகுப்பைச் சேர்ந்தது. இதன் பழம் செந்நிறமாய் இருக்கும். இச்செடி சாம்பல் நிறமுடையதாக இருக்கும்.        இதன் – இலை – வேர் (கிழங்கு) எல்லாம் மருத்துவ உபயோகத்திற்கு ஏற்றது. இது சித்த மருத்துவ மரபுப்படி அறுசுவைகளின் படி கசப்பு – வெப்பம் – காரம் என்னும் தன்மை களைக் கொண்டது. இதன் கிழங்கு மருத்துவத்தில் அதிகம் பயன்படுகிறது. இக் கிழங்கு கசப்பு, வெப்பம், கார்ப்பு என்னும் அடிப்படையில் உடற் தேற்றி என்னும் செயலி படி உடலில் உண்டாகிற நோய்களை நீக்கி நல்ல நிலைக்கு கொண்டுவரும், அடுத்து காமம் பெருக்கியாக செயல் பட்டு உடல