Posts

Showing posts from August, 2014

அ - வரிசை அதிவிடயம்

Image
அதிவிடயம் --- ATIVIDAYAM :-- வேறுபெயர் – அதிவிடையம், அத்திரணம், மனக்குறை, மாதிரி ஆங்கிலப் பெயர் – INDIAN ALEES தாவரவியல் பெயர் – ALEONITUM HETEROPHYLLUM                 இது செடி வகுப்பைச் சேர்ந்தது. இதன் வேர் குவிந்த வடிவமாக இருக்கும் 1 -1  ½  அங்குலம் நீளம் இருக்கும். கணம் ¼ அங்குலம் இருக்கும். இது சாம்பல் பூத்த நிறமும் கருப்பு புள்ளிகளையும் உடையது. வாசனையற்றது எளிதில் பொடியாகும். இதன் உட் பாகம் வெண்மையாக இருக்கும். பயன் பாடு – வேர் சுவை – கைப்பு , வீரியம் – வெப்பு , பிரிவு – கார்ப்பு செயல் – பசித்தூண்டி --------- STOMACHIC            துவர்ப்பி --------------- ASTRINGENT          வெப்பகற்றி   ---------- FOBRIFUGE          காமம் பெருக்கி ---   APHRODISIAC                   முறை வெப்பகற்றி -- ANTI PERIODIC குணம் --- சர்க்கரா அற்புத விரணம், முறைச்சுரம் விட்டு விட்டு வருகிற சுரம், அதிசாரம், கோழை, மேல் நோக்கிய வாந்தி முதலிய நோய்களை போக்கும். பாடல் – அதிவிடயம் சர்க்கரா அற்புத நோய் கொதி மருவு பேதியொடு கோழை –

அ - வரிசை அதிமதுரம்

Image
அதிமதுரம் – ATIMATHURAM :-- வேறு பெயர் – அதிங்கம் அட்டி (யஷ்டி) மதூகம் குன்றிவேர் ஆங்கிலப் பெயர் – JEQUIRTY, INDIAN (OR) JAMAICA LIQUORICE தாவரவியல் பெயர் – ABRUS PRECATORIOUS, GLYCERRHIZE RADIX        இது மலைகளில் பயிராகும் குன்றிமணியின் வேராகும். இது சிறிதும் பெரிதுமாய், மஞ்சள் நிறமுள்ளதாய், வெளிப்புறத்தில் மரக் கலராயிருக்கும். பெரும்பாலும் வென்குன்றியின் வேரே பயன் படுகிறது. இதன் விதைகள், கருப்பு, வெள்ளை, சிவப்பு, கருப்பு+சிவப்பு நிறங்களில் உள்ளது. இதற்கு பதிலாக மற்ற குன்றிமனிகளின் வேர்களையும் உபயோகிப்பது உண்டு. பயன்படும் பாகங்கள் :-- இலை, வேர், பால், விதை. இலை – சுவை – இனிப்பு கைப்பு, வீரியம் – வெப்பம், பிரிவு – கார்ப்பு. வேர் – சுவை – இனிப்பு, வீரியம் – சீதம், பிரிவு – இனிப்பு விதை – சுவை – கைப்பு,  வீரியம் – வெப்பம், பிரிவு –கார்ப்பு பால் – சுவை – இனிப்பு, வீரியம் – சீதம், பிரிவு - இனிப்பு . செயல் – வரட்சியகற்றி – EMOLLIENT          உள்ளழலாற்றி – DEMULCENT          கோழையகற்றி – EXPECTORANT          மலம