Posts

Showing posts from August 23, 2014

அ - வரிசை - அகில்

Image
அகில் – அகரு – AGIL :--- வேறு பெயர்கள் ------ அகரு- அகிற்கட்டை – பூழில் – காக துண்டம் ஆங்கில பெயர் -------- ALOE WOOD, EAGLE- WOOD, SWEET SCENTED – WOOD தாவரவியல் பெயர் - AQUILARIA  AGALLOCHI (OR) AQUILARIYA OVATA .        இது மரவகுப்பைச் சார்ந்தது – இது இமயத்தின் கீழ்க்கண்ட இடங்களில் வளர்க்கப்படுகிறது. அசாம், பூட்டான் முதிலிய இடங்களில் வளர்கின்றது. இதுவும் சந்தனம் போல் நறுமணம் மற்றும் மருத்துவத்திற்கு பயன்படுகிறது. கள்ளி மரம் முற்றினால் அதன் உள் பகுதி அகில் போல் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இது குறித்தே கள்ளி வயிற்றில் அகில் பிறக்கும் என்பர். உபயோகப்படும் பகுதி – கட்டை, பிசின் சுவை – கார்ப்பு,கைப்பு, குறைந்த இனிப்பு செயல் – வெப்பமுண்டாக்கி --- STIMULANT            பித்தர் நீர் பெருக்கி – CHOLAGOGUE          வீக்க முறுக்கி ----------   DEOBSTRUENT பொது குணம் --- அகருக் கட்டையினால் பீனிசம், தலைக் குத்து ( ஒற்றைத்தலைவலி) வாதம்,நமைப் புடைகள், சிற்சில சுரம்,வாந்தி,அருசி அயர்வு ஆகிய இவைகள் நீங்கும் வயதானவர்கள் உடலை இறுக்கி பலப்படுத்தும். பாடல் –