Posts

Showing posts from September 2, 2014

அ - வரிசை - அபினி

Image
அபினி – ABINI :---- வேறு பெயர் – கசகசாகாயின் உறைந்த பால் ஆங்கிலப்பெயர் – PAPPY தாவரவியல்பெயர் – OPIUM        இது கசகசாக் காயில் இருந்து எடுக்கப்படும் உறைந்த பால். காய் பழுக்காதற்கு முன்பும் பூ இதழ்கள் உதிர்ந்து 7 – நாள் கழிந்த பின் இரண்டு, மூன்று நீண்ட வட்டமான கீறல்கள் காயின் மேல் ஓட்டில் ஆழமில்லாமல் கீறிவிட அதில் இருந்து பால் வடியும். மற்றும் பகல் வெய்யில்  காலத்தில் கீறின் வாயிற் பால் உறைந்து விடுமாதாலால் பால் அதிகம் கிடைக்காது. ஆகவே மாலைப் பொழுதில் கீறி இரவு முழுவதும் பால் வடிந்து உறைந்து இருக்கும் இதைக் காலையில் சுரண்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்விதம் ஒரு கையில் இரண்டு மூன்று முறை கீறிப் பால் எடுக்கலாம்.எடுத்த பின் காற்று வெய்யிலால் வறட்சியடையும் மாதலால் இலைகளால் மூட்டி வைக்க வேண்டும்..        ஸ்மர்ணா ( SMYRNA ) துருக்கி ( TURKEY ) இவ்விடங்களில் உற்பத்தியாவது தான் பெரும் பாலும் இங்கிலாந்தில் உபயோகப்படுகிறது.        இந்தியாவில் பாட்னா ( PATNA ) மால்வா ( MALWA ) இவ்விடங்களில் உற்பத்தியாகிறது இதன் குணம் இது விளையும் இடத்தின்