Posts

Showing posts from September 5, 2014

அ - வரிசை - அரத்தை

Image
அரத்தை— ARATHTHAI   இதில் இரண்டு வகை உள்ளது – சிற்றரத்தை – பேரரத்தை ஆங்கிலப் பெயர் – GALANGEL THE LESSER, GALANGAL தாவரவியல் பெயர் – ALPINIA CHINENSIS , ALPINIA GALANGA  இது இந்தியாவின் உஷ்ணப் பிரதேசங்களில் பயிராகிறது. மருத்துவ உபயோகம் – வேர் சுவை – கார்ப்பு, வீரியம் – வெப்பம் , பிரிவு – கார்ப்பு செயல் – கோழையகற்றி – EXPECTORANT          வெப்பகற்றி ------- FEBRIFUGE          பசித்தூண்டி ------ STOMACHIC   இரு அரத்தைகளின் போதுகுனம் – நெஞ்சுக் கோழை, ஈளை, இருமல், சீதளம்,கரப்பான், மார்பு நோய், மூலம், வீக்கம், தந்த நோய், தந்த மூலப் பிணி, வாத சோணிதம், தீச்சுரத்தால் பிறந்த கபம்,ஆகியவைகளை போக்கு.பசியைத் தரும். பாடல் – தொண்டையிற்கட் டுங்கபத்தைத் தூரத் துரத்திவிடும் பண்டைச் சீதத்தைப் பறக்கடிக்கும் – கெண்டை விழி மின்னே ! கரப்பனைவே றாக்கும் பசிகொடுக்கும் சொன்னோம் அரத்தைச சுகம்                                                       --- அகத்தியர் குணவாகடம் மார்பை யடர் பிணிசு வாசகா சம்மூலம் சோபை தட்டச் சூர்வாத சோனித