Posts

Showing posts from September 16, 2014

இ - வரிசை - இலவங்கம்

Image
இலவங்கம் --- LAVANGAM :--- வேறு பெயர் – அஞ்சுகம், உற்கடம், கருவாய், கிராம்பு சொசம்,திரளி, வராங்கம் ஆங்கிலப் பெயர் --------- CLOVES தாவரவியல் பெயர் ----- CARYOPHYLLUM         இது இந்தியாவிலும் இலங்கையிலும் பயிராகிறது. எல்லாக் கடைகளிலும் கிடைக்கும். இது நல்ல மனம், காரம், விறுவிறுப்பு உள்ளதாகவும் கிள்ளினால் தைலப் பசை உள்ளதாயும் இருக்கும். சுவை – காரமும் விறு விருப்பும் உள்ளது . வீரியம் – வெப்பம், பிரிவு – கார்ப்பு செயல் – இசிவகற்றி – ----- --------- ANTISPAMODIC          அகட்டுவாய்வகற்றி ---- CARMINATIVE           பசித்தூண்டி ---------------- STOMACHIC   குணம் --  கிராம்பு பித்த மயக்கம், பிரதி வாந்தி, இரத்தக் கடுப்பு, கிராணி, ஆசனப்பிடுங்கள், சுக்கில நட்டம், செவிநோய், சிவந்த மச்சம், கருத்த மச்சம், விவுர்தம், சம்விவுர்தம், என்ற வாதங்கள், கண்ணில் பூ, படை இவைகளை நீக்கும். கரிமசாலையில் சேர்க்கப்படுகிறது. பாடல் --- பித்த மயக்கமரும் பேத்தியோடு வாந்தியும் போம் சுத்தவிரத் தக்கடுப்பும் தோன்றுமோ – மெத்த இலவங்கங் கொண்டவருக் கேற்ற சுகமாகும் மளமங்கே கட்டு