Posts

Showing posts from August 19, 2014

அ - வரிசை அக்ரோட்டு

Image
அக்ரோட்டு – AKROTTU :-- ஆங்கிலப் பெயர் – WALNUT தாவரவியல் பெயர் – JUGLARIS REGIA                 இது மரவகுப்பைச் சேர்ந்தது இமயமலையில் தன்னிச்சையாக வளர்கிறது. காஸ்மீர், திபெத், ஆப்கானிஸ்தானம் இவ்விடங்களில் வளர்க்கப் படுகிறது. மருத்துவ பயன் – இலை, காய், பழம், பருப்பு, பழத்தோல், பட்டை . செயல் – உடற்தேற்றி – ALTERATIVE          துவர்ப்பி ------- ASTRINGENT          உரமாக்கி ----- TONIC     இலை குணம் ---        ஒருபங்கு இலைக்கு, பணிரண்டு பங்கு நீர் சேர்த்து காய்ச்சி நாலில் ஒன்றாக குறுக்கி கசாயத்தைக் கொடுத்துவர, கண்டமாலை, எலும்புருக்கி, வெள்ளை படுதல், குணப்படும். மற்றும் புண்களைக் கழுவ இக் கசாயம் பயன் படும். இதனால் புண்கள் விரைவில் ஆறும். காய்குனம் - --        செயல் – புழுவகற்றி – VERMIFUGE                 இதன் காயை சாப்பிட குழந்தைகளின் வயிற்றில் உண்டாகும் கிருமிகளை வெளிப்படுத்தும். பழமும் உள் பருப்பும் –        செயல் – உடற் தேற்றி – -----  ALTERATIVE                   காமம் பெருக்கி – APHRODISIAC இந்த பருப்பு உடலு

அ - வரிசை அக்கரகாரம்

Image
அக்கர காரம் – AKKRA KARAM :--- வேறுபெயர் – அக்கராகாரம், அகிராகாரம் ஆங்கில பெயர் – PELLITORY OF SPAIN, PELLITORYROOT, PYRETHIRADIX, ROOT OF THE ANTHEMIS PYRETHRUM . தாவரவியல் பெயர் – ANACYCLUS PYRETHRUM.                 இந்த மரத்தின்வேர் பட்டை இரண்டு மட்டுமே மருத்துவ பயன்பாட்டில் உள்ளது.இந்த வேர் விரல் பருமன் அளவிற்கு இருக்கும். நிறத்தில் வெண்கருமையாக இருக்கும். இதை மென்று சுவைக்க நாக்கு, உதடு இவ்விடங்களில் விறு விருப்பையும், எரிச்சலையும் உண்டாக்கும். வாயில் உமிழ் நீர் சுரக்கும் இது வங்காளம், அரபு நாடுகளில் வளர்க்கப்படுகிறது. சுவை – கார்ப்பு, வீரியம் – வெப்பம், பிரிவு – கார்ப்பு. செயல் – வெப்பமுண்டாக்கி – STIMULANT உமில்நீர்பெருக்கி --- SIALOGAGUE தடிப்புண்டாக்கி ------ RUBEFACIENT பொதுகுனம் :-- இதனால் பயங்கரமான காலதோடம் (வாததோடம்) தாகசுரம் நீங்கும் இதை வாயிலிட்டு அடக்கிக் கொண்டு சுவைத்து வர நாவரட்சி, நீங்கி உமிழ் நீர் சுரக்கும். பாடல் – அக்கரகாரம் அதன்பேர் உரைத்தக்கால் உக்கிரகால அத்தோட்டம் ஒடுங்கான் – முக்கியம