Posts

Showing posts from September 12, 2014

இ - வரிசை - இலவங்கப்பட்டை

Image
இலவங்கப் பட்டை – LAVANGA PATTAI வேறு பெயர் – கருவாய் பட்டை ஆங்கிலபெயர் – CINNAMON – BARK தாவரவியல் பெயர் – CHINNAMONUM ZEYLANICUM                   கருவாப்பட்டைச் செடி இலங்கைக்கும், இந்தியாவிற்கும் உரிய பயிர், ஆயினும் இலங்கையில் தான் அதிகமாக பயிர் செய்யப்படுகிறது. இது மற்ற நாடுகளை விட உயர்வானது. இது சமையலில் வாசனைக்காக பயன்படுகிறது. இது வாய் நாற்றத்தைப் போக்கும். சுவை – காரமும், இனிப்பும் உள்ளது , வீரியம் – சீதம் பிரிவு – கார்ப்பு செயல் – வெப்பமுண்டாக்கி ------ STIMULANT          அகட்டுவாய்வகற்றி ---- CARMINATIVE          காமம் பெருக்கி ---------- APHRADISIAC  குணம் --- தாது நஷ்டம், ஆசியநோய், சர்ப்ப விஷம், பேதி அதிசாரம், பூதகிரகம், இரைப்பு, சகலவிஷம், சிலந்தி விஷம், இருமல், இரத்தக் கடுப்பு, வயிற்றுக் கடுப்பு, உல் மூலம் ஆசனப்புண், இவைகளையும் நீக்கும். தேகத்துக்கு குளிர்ச்சி உண்டு பண்ணும். பாடல் – தாதுநட்டம் பேதி சருவ விஷம் ஆசியநோய் பூதகிர கஞ்சிலந்திப் பூச்சி விடம் – சாதிவிடம் ஆட்டு மிறைப் போடிருமல் ஆகியநோய்க் கூட்டமற ஒட்டுங்இல வங