Posts

Showing posts from September 6, 2014

அ - வரிசை - அரிசித்திப்பிலி

Image
அரிசித்திப்பிலி :-- இதன் வேறு பெயர்கள் --- ஆர்கதி, உன்சாரம், உலவைநாசி, காமன், குடோரி, கோலகம், கோழி, கோலையறுக்கி, சரம், சஷ்டி, துலவி, மாகதி, கணை, சொளண்டி தண்டுலி, கணம், கலினி, பானம், பிப்பிலி, வைதேகி, அம்பு, ஆதிமருந்து. தாவரவியல் பெயர் – piper longum, - chavica rox burghi ஆங்கிலப் பெயர்     - long pepper தெலுங்கு பெயர்     - பிபில்லு மலையாள பெயர்    - திப்பிலி கன்னட பெயர்       - ஹிப்பிலி சமஸ்கிருத பெயர்   - பிப்பாலி        இத்தாவரம் கொடியாக வளரக் கூடியது. இது தென்னிந்தியாவில் உண்டு, வங்காளத்தில் இதன் பழத்திற்காக பயிரிட்டு வளர்க்கிறார்கள். இதன் காரத்தன்மை அதிகம் நாவில் நமைச்சலை உண்டாக்கும், இதில் இரண்டு பிரிவு உண்டு ஒன்று அரிசித்திப்பிலி – இன்னொன்று ஆனைத்திப்பிலி குணம் – சுவை இனிப்பு, காரம் திப்பிலிக் கொடியின் உலர்ந்த பழங்களே மருத்துவத்தில் அதிகம் பயன் படுகிறது. இது கடைச்சரக்குகளில் ஒன்று. செயல் – வெப்பமுண்டாக்கி – stimulant ,   அகட்டுவாய்வகற்றி – carminative  இருமல் குன்மம் இரைப்பு கயப்பிணி ஈளை பாண்டு சந்நியாசம் அரோசகம் ப