Posts

Showing posts from September 14, 2014

இ - வரிசை - இலவங்கப்பத்திரி

Image
இலவங்கப் பத்திரி – LAVANGKA PATHTHIRI ஆங்கிலப் பெயர் – ACHINNAMUM LEAVES தாவரவியல் பெயர் – CHINNAMUM TAMALE, CASSIA LINGNEA        இது இந்தியாவில் இமயமலை, கீழ்வங்காளம் முதலிய இடங்களிலும், பர்மா முதலிய நாடுகளிலும் விளைகிற ஒருவகை. இலவங்கப் பட்டைச் செடியின் குணமும் வாசனையும் இதற்கு உண்டு. இதன் பட்டை விலையுயர்ந்த இலங்கைக் கருவாபட்டைக்குப் பதில் உபயோகப்படுகிறது. சுவை – கார்ப்பு, வீரியம் --- வெப்பம் , பிரிவு – கார்ப்பு செயல் --- வெப்பமுண்டாக்கி ------ stimulant           அகட்டுவாய்வகற்றி --- carminative           பசித்தூண்டி - ------ -------- stomachic           வியர்வை பெருக்கி --- diaphoretic குணம் --- மேகசுரம், சீதசுரம், வேட்டை, சுவாசம், காசம். தாகம், பித்தம், வாந்தி, வாய்ப்புண், மேகக் கட்டி, தாது நட்டம், கைப்பு, அருசி, இவைகளைப் போக்கும். பாடல் --- மேகசுரம் சீதசுரம் வெட்டை சுவாசங் காசம் தாகபித்தம் வாந்திசர் வாசியநோய் – மேகத்தின் கட்டியோடு தாதுநட்டங் கைப்பருசி ப