அ - வரிசை அதிவிடயம்

அதிவிடயம் --- ATIVIDAYAM :--



















வேறுபெயர் – அதிவிடையம், அத்திரணம், மனக்குறை, மாதிரி
ஆங்கிலப் பெயர் – INDIAN ALEES
தாவரவியல் பெயர் – ALEONITUM HETEROPHYLLUM
                இது செடி வகுப்பைச் சேர்ந்தது. இதன் வேர் குவிந்த வடிவமாக இருக்கும் 1 -1  ½  அங்குலம் நீளம் இருக்கும். கணம் ¼ அங்குலம் இருக்கும். இது சாம்பல் பூத்த நிறமும் கருப்பு புள்ளிகளையும் உடையது. வாசனையற்றது எளிதில் பொடியாகும். இதன் உட் பாகம் வெண்மையாக இருக்கும்.
பயன் பாடு – வேர்
சுவைகைப்பு, வீரியம் – வெப்பு, பிரிவுகார்ப்பு
செயல் – பசித்தூண்டி --------- STOMACHIC  
         துவர்ப்பி --------------- ASTRINGENT
         வெப்பகற்றி  ---------- FOBRIFUGE
         காமம் பெருக்கி ---  APHRODISIAC 
                முறை வெப்பகற்றி -- ANTI PERIODIC
குணம் --- சர்க்கரா அற்புத விரணம், முறைச்சுரம் விட்டு விட்டு வருகிற சுரம், அதிசாரம், கோழை, மேல் நோக்கிய வாந்தி முதலிய நோய்களை போக்கும்.
பாடல் –
அதிவிடயம் சர்க்கரா அற்புத நோய்
கொதி மருவு பேதியொடு கோழை – எதிர் வாந்தி
என்றுரைக்கும் நோய்க் கூட்டம் இல்லாதகற்றிவிடும்
குன்றை நிகர் முலையாய் ! கூறு
                                            ----- அகத்தியர் குணவாகடம்






மருத்துவ குணம் ---
       இதைச் சூரணம் செய்து ஒரு டீஸ்பூன் முதல் ஒன்னரை டீஸ்பூன் அளவு எடுத்து தேனில் குழைத்துக் கொடுத்துவர முறைச்சுரம், விட்டு விட்டு வரும் சுரம் குணமாகும். ¼ டீஸ்பூன் முதல்  ½  டீஸ்பூன் அளவாக நாள் ஒன்றுக்கு மூன்று முறை கொடுக்க சுரத்திற்கு பின் வரும் அசதி நீங்கும். அஜீரண பேதி, சீதபேதி, வாதம் மூலம், மூலக் கடுப்புகளில் உடல் தன்மை வயது போல் கூட்டிக், குறைத்து வர குணம் தரும்.
பேதியுடன் கூடிய சுரத்திற்கு குடிநீர் –
அதிவிடையம் --------- ------ ------------ 15 gm
சுக்கு ------ ------- --------- ------- -----------   15 gm
குடசப்பாலை ----- ------- ------- ---------  15 gm
முத்தக்காசு (கோரைக் கிழங்கு) – 15 gm

சீந்தில் கொடி ----- ----- ------- ---------- 15 gm  இவைகளை எடுத்து ஒன்றிரண்டாக இடித்து தூளாக்கி 400 ml நீர் விட்டு நூறு மில்லியாக குறுக்கி அதை மூன்று பாகமாக பிரித்து எடுத்துக் கொண்டு தினம் மூன்று வேலை கொடுக்க பேதி நிற்கும்.
வேறு – அதிவிடயம், சிற்றாமுட்டி, கோரைக்கிழங்கு, கர்க்கடகசிங்கி, பிரப்பம்பட்டை இவ் ஐந்தும் கூட்டி கசாயம் செய்து கொடுக்கலாம் கபம் இருந்தால் இதனுடன் திப்பிலி சேர்த்துக் கொடுக்கலாம்.

















இவையாவும் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். 

Comments

Popular posts from this blog

அ - வரிசை - அரிசித்திப்பிலி

இ - வரிசை - இலவமரம்

அ - வரிசை - அகில்