அ - வரிசை அக்ரோட்டு
அக்ரோட்டு – AKROTTU :--
ஆங்கிலப்
பெயர் – WALNUT
தாவரவியல்
பெயர் – JUGLARIS REGIA
இது மரவகுப்பைச் சேர்ந்தது இமயமலையில் தன்னிச்சையாக வளர்கிறது.
காஸ்மீர், திபெத், ஆப்கானிஸ்தானம் இவ்விடங்களில் வளர்க்கப் படுகிறது.
மருத்துவ
பயன் – இலை, காய்,
பழம், பருப்பு, பழத்தோல், பட்டை.
செயல் –
உடற்தேற்றி – ALTERATIVE
துவர்ப்பி -------
ASTRINGENT
உரமாக்கி -----
TONIC
இலை குணம்
---
ஒருபங்கு இலைக்கு,
பணிரண்டு பங்கு நீர் சேர்த்து காய்ச்சி நாலில் ஒன்றாக குறுக்கி கசாயத்தைக்
கொடுத்துவர, கண்டமாலை, எலும்புருக்கி, வெள்ளை படுதல், குணப்படும். மற்றும்
புண்களைக் கழுவ இக் கசாயம் பயன் படும். இதனால் புண்கள் விரைவில் ஆறும்.
காய்குனம் ---
செயல் – புழுவகற்றி – VERMIFUGE
இதன் காயை சாப்பிட குழந்தைகளின் வயிற்றில் உண்டாகும் கிருமிகளை
வெளிப்படுத்தும்.
பழமும் உள் பருப்பும் –
செயல் – உடற் தேற்றி –----- ALTERATIVE
காமம் பெருக்கி
– APHRODISIAC இந்த பருப்பு உடலுக்கு பலந்தரும், இதை உணவிலும் சேர்க்கப்படுகிறது.
பழத்தோல் குணம் –
செயல் – மேகப் பிணி விலகி – ANTI SYPILITIC
புழுவகற்றி -- ----- -------- VERMIFUGE
இப் பழத்தோலை கசாயம் செய்து உபயோகித்து வர மேக நோய்கள் சாந்தமாகும்,
வயிற்றில் சேர்ந்துள்ள புழுக்களை வெளிப்படுத்தும்.
பட்டை குணம் –
செயல் – துவர்ப்பி –----- ASTRINGENT
புழுக் கொல்லி ---------- -- ANTHALMINTIC
புண் அழுகல் அகற்றி – DETERGENT
பால் சுறுக்கி ----------------- LACTIFUGE
இது தொண்டைப் புண்களை ஆற்றும், பால் சுரப்பை நிறுத்தும்,இந்த பட்டையை
கசாயம் செய்து வாய் கொப்பளிக்க வாய்ப் புண் தொண்டைப் புண் ஆறும்.
விதை குணம் (பருப்பு) –
செயல் – பித்த நீர் பெருக்கி – CHOLOGOGUE
மலமிளக்கி
------------- MILD
LAXATIVE
இந்த பருப்பில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் சிறிது மஞ்சள் அல்லது
செம் மஞ்சள் நிறமாய் இருக்கும். ஆளி விதை எண்ணெய்யின் மனம் இருக்கும்.
பொது குணம் –
மலத்தில் உள்ள பெரும் புழுவை (நாக்கு பூச்சி) போக்க இந்த எண்ணையை உள்ளுக்கு கொடுக்கலாம்.
அக்ரோட் – 2 (நாட்டு) – NAATTU AKROTTU
தாவரவியல் பெயர் – ALEURIS
TRILOBA (BELGAUM)
ஆங்கிலப் பெயர் ------ FRUT OF BENGAL WALNUT
இது மலேயா, ஆர்ச்சி பெல
கோவிற்குரியது, ஆயினும் பொதுவாக இந்தியாவிலும் கேரளா வயனாட்டிலும் வளர்க்கப்
படுகிறது இது மார வகுப்பைச் சேர்ந்தது.
பயன் பாடு – பழம், விதை, எண்ணெய்
செயல் – பருப்பு – கமாம் பெருக்கி –--------- APHRODISIAC
குளிர்ச்சியுண்டாக்கி –- COOLING
எண்ணைய் - பெருமலம் பெருக்கி – LATHARTIC
பொது குணம் –
பேதியாகும், பித்த நீரை அதிகரித்து வெளியேற்றும். மூல வேதனையை தனிக்கும்,
பருப்பில் இருந்து எடுக்கும் இந்த எண்ணெய் வயிற்று வேதனை இன்றி சாந்தமாய்
பேதியாகும். இதனால் ஆமணக்கு எண்ணெய்க்கு பதில் தரலாம். ஒன்று முதல் இரண்டு
டேபிள்ஸ்பூன் அளவு கொடுக்கலாம் இது மலத்துடன் பித்த நீரை அதிகமாக வெளியேற்றும்.
இந்த எனேயை ஒரு பஞ்சில் நனைத்து ஆசனத்தில் சொருகி வைக்க மூல வேதனை குறையும்.
பூச்சிகளை கொல்லும்.
( The vernacular names given to this
plant in enemy book which treats of it , are those properly belonging to juglan
regia ( walnut) and to convert them in to those of aleuritis lrilobia (belgam
walnut) it is necessary the word country wild Indian (or) belgam should beaded
to than)
குறிப்பு :-- அக்ரோட் சேர்ந்த ஒரு தாது விருத்தி லேகியம் யுனானி முறை
இதில் உள்ள மருந்து பொருள்கள் யுனானி மருந்து விற்கும் கடைகளில் கிடைக்கும்.
பாதாம்பருப்பு ------------- 150 gm
பிஸ்தா பருப்பு ---------- 60 gm
சில்கூஜாபருப்பு --------- 35 gm
அக்ரோட்டு பருப்பு ---- 35 gm
பிந்தக் பருப்பு ------------ 35 gm
கசகசா ----------- ----------- 20 gm
சுரைக்காய் பருப்பு --- 60 gm
பருத்தி பருப்பு ---------- 35 gm
முள்ளங்கி விதை ---- 25 gm
துஃமே சல்ஜம் --------- 30 gm
நீர்முள்ளி விதை ---- 35 gm
குறுபாவிதை ----------- 25 gm
சத்தாவர் ------------------ 25 gm
மூஸ்லி ------------------- 25 gm
முசிலிசியா ------------- 25 gm
துஃமோச்சரஸ் --------- 35 gm
சாலமிச்ரி --------- ------ 75 gm
ஷிக்காகுல் மிசிரி --- 50 gm
சுக்கு -------- ------- ------- 25 gm
ருமிமஸ்தகி ----- ----- 35 gm
குந்தர் ----- ------- ------- 20 gm
தபாஷீர் ------ ----- ----- 20 gm
தூதாரி சுபேத் --------- 20 gm
பூநித்தாள் ----- --------- 20 gm
பிகேபன் ----- ----------- 15 gm
தார்சின்னி ----- ------- 20 gm
காரேகுஸ்க் ----- ----- 20 gm
துஃமேக விஞ்ச ------ 25 gm
இவற்றில் பருப்பு இனங்களை தனியாக எடுத்து வெந்நீரில் ஊறவைத்து ஒரு
மணிநேரம் கழித்து மிக்சியில் போட்டு பால் விட்டு நைசாக அரைத்து பால் பிழிந்து
எடுத்து வைத்துக் கொள்ளவும் இதில் அபினியை கரைத்து விட்டு இதில் நாட்டுச் சர்க்கரை
1400 gm சேர்த்து அடுப்பில் வைத்து
எரித்து கம்பி பதத்தில் எடுத்து அதில் மற்ற மருந்துகளின் பொடியை போட்டுக் கிளறி 350gm நெய் விட்டு கலந்து எடுத்துக் கொள்ளவும். வேலைக்கு 5 -6 கிராம் அளவு வீதம் சாப்பிட்டு வர நீர்த்த இந்திரியம் கட்டுப்பட்டு
இரத்த விருத்தியும் உடல் உறவில் அதிக இன்பமும் கிடைக்கும்.
குறிப்பு : -- இது நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்
Comments
Post a Comment