அ - வரிசை - அகில்
அகில் – அகரு – AGIL :---
வேறு பெயர்கள் ------
அகரு- அகிற்கட்டை – பூழில் – காக துண்டம்
ஆங்கில பெயர்
-------- ALOE
WOOD, EAGLE- WOOD, SWEET SCENTED – WOOD
தாவரவியல் பெயர் - AQUILARIA AGALLOCHI (OR) AQUILARIYA OVATA.
இது மரவகுப்பைச்
சார்ந்தது – இது இமயத்தின் கீழ்க்கண்ட இடங்களில் வளர்க்கப்படுகிறது. அசாம்,
பூட்டான் முதிலிய இடங்களில் வளர்கின்றது. இதுவும் சந்தனம் போல் நறுமணம் மற்றும்
மருத்துவத்திற்கு பயன்படுகிறது. கள்ளி மரம் முற்றினால் அதன் உள் பகுதி அகில் போல்
இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இது குறித்தே கள்ளி வயிற்றில் அகில் பிறக்கும்
என்பர்.
உபயோகப்படும் பகுதி – கட்டை, பிசின்
சுவை – கார்ப்பு,கைப்பு, குறைந்த இனிப்பு
செயல் – வெப்பமுண்டாக்கி --- STIMULANT
பித்தர்
நீர் பெருக்கி – CHOLAGOGUE
வீக்க
முறுக்கி ---------- DEOBSTRUENT
பொது குணம் --- அகருக் கட்டையினால் பீனிசம், தலைக் குத்து (
ஒற்றைத்தலைவலி) வாதம்,நமைப் புடைகள், சிற்சில சுரம்,வாந்தி,அருசி அயர்வு ஆகிய
இவைகள் நீங்கும் வயதானவர்கள் உடலை இறுக்கி பலப்படுத்தும்.
பாடல் –
நாசியடைப்பு நவிரவிடி தாளுநோய்
வீசு நமைப் புடைகள் விட்டேகும் – பேசில்
சுகுரு மயங் குந்துனை முலையாய் ! நல்ல
அகரு மரத்தாலறி
தளர்ந்தவி ருத்தருக்காந் தக்க மணத்தால்
உளைந்த சுரமனைத்து மோடும் – வலிந்திகழ
மானே ! அகிற்புகைக்கு வாந்திய ரோசகம் போம்
தானே தளர்சியறுஞ் சாற்று
--- அகத்தியர்
குணவாகடம்
இதனைக் கொண்டு செய்யும் மருந்துகள் – பயன்கள் :---
அகிற் கட்டையை நீர் விட்டு சந்தானம் போல் அரைத்து உடலில் பூசிக்கொண்டு
வர வயோதிகர்களின் உடல் தோல் சுருக்கங்கள், அதைப்பு, நீங்கி உடல் இருக்கும்.
இதன் வாசனையாலும் இதன் வெப்பம் உண்டாக்கும் செயலாலும் இதனை சிலவகையான
சுரநோய்க்கான காசயங்களில் சேர்த்து தரப்படுகிறது.
அகிர்கட்டையை தனித்தும் அல்லது மற்றும் தேவதாரு, கார்போக அரிசி,
சந்தனக் கட்டை, சாம்பிராணி, பூலாங்கிலங்கு, கஸ்தூரி மஞ்சள் வெட்டிவேர், விலாமிச்சம்வேர்
போன்ற மற்ற கடைச் சரக்குகள் சேர்த்து ஒன்றிரண்டாக
இடித்து வைத்துக் கொண்டு நெருப்பில் போட்டு புகை உண்டாக்கி அதை குழந்தைகள் தலைக்கு
நீர் விட்டு குளிப்பாட்டிய பின் காட்டுவது நம் பெரியோர் வழக்கம். இதனால் தலையில்
நீர் ஏற்றம், தலைபாரம், சளி, மற்றும் சில கண்ணுக்கு தெரியாத அளவிலான கிருமித்
தொற்றுக்கள் நீங்கும். அது போல் இதன் புகையால் வீட்டில் காலை, மாலை புகை போட கொசு
போன்ற பூச்சிகள் வெளியேற்றபடும்.
இதன் சூரணம் தரப்படுவது இல்லை ஆனால் சில தாது பலத்திற்குரிய
மருந்துகளுடன் சேர்க்கப்படுகிறது. மற்றும் இதைக் கொண்டு முடித் தயிலம்
செய்யப்படுகிறது.
அகிற்கட்டை தயிலம் –
அகிற் கட்டையை 300
GM எடுத்து ஒன்றிரண்டாக இடித்து ஒரு பாத்திரத்தில்
போட்டு 2 லிட்டர் நீர் விட்டு நான்கில் ஒரு பாகமாக சுருக்கி அதில் நல்லெண்ணெய்
அரை லிட்டர் பசும் பால் அரை லிட்டர் எடுத்துக் கொண்டு அதில் அதிமதுரம்,
தான்றிக்காய் தோல் 35 GM எடுத்து பொடித்து போட்டு பாலில் கலக்கி யாவும் ஒன்றாக சேர்த்து
அடுப்பில் வைத்துக் காய்ச்சி நீர் சுண்ட எரித்து எடுத்துக் கொண்டு தலைக்கு
தேய்த்து குளித்து வர நீர்க் கோவை, மேகம், பீனிசம் தீரும்.
குறிப்பு – இது நாட்டு
மருந்து கடைகளில் கிடைக்கும்
ஐயா வணக்கம். கள்ளி மரம் என்கிறீர் கள்ளி கொடிபோலவும் செடி போலவும் உள்ளது. கள்ளியில் அகில் பிறக்கும் என்பதில் கள்ளி என்பதை விளக்கின் நன்றாக இருக்கும்.
ReplyDeleteஐயா...வயிற்று புண்ணுக்கு வைத்தியம் சொல்லுங்கள்..... உங்கள் வாட்ஸ்..ஏப்...எண்ணைத் தாருங்கள்..... என் வாட்ஸ் ஏப் எண்...9994755599...நிறைய சொல்ல வேண்டியுள்ளது ஐயா
ReplyDelete