அ - வரிசை - அபினி
அபினி – ABINI :----
வேறு பெயர் – கசகசாகாயின் உறைந்த பால்
ஆங்கிலப்பெயர்
– PAPPY
தாவரவியல்பெயர்
– OPIUM
இது கசகசாக் காயில்
இருந்து எடுக்கப்படும் உறைந்த பால். காய் பழுக்காதற்கு முன்பும் பூ இதழ்கள்
உதிர்ந்து 7 – நாள் கழிந்த பின் இரண்டு, மூன்று நீண்ட வட்டமான கீறல்கள் காயின் மேல்
ஓட்டில் ஆழமில்லாமல் கீறிவிட அதில் இருந்து பால் வடியும். மற்றும் பகல்
வெய்யில் காலத்தில் கீறின் வாயிற் பால்
உறைந்து விடுமாதாலால் பால் அதிகம் கிடைக்காது. ஆகவே மாலைப் பொழுதில் கீறி இரவு
முழுவதும் பால் வடிந்து உறைந்து இருக்கும் இதைக் காலையில் சுரண்டி எடுத்துக் கொள்ள
வேண்டும். இவ்விதம் ஒரு கையில் இரண்டு மூன்று முறை கீறிப் பால் எடுக்கலாம்.எடுத்த
பின் காற்று வெய்யிலால் வறட்சியடையும் மாதலால் இலைகளால் மூட்டி வைக்க வேண்டும்..
ஸ்மர்ணா (SMYRNA) துருக்கி (TURKEY) இவ்விடங்களில் உற்பத்தியாவது தான் பெரும் பாலும் இங்கிலாந்தில்
உபயோகப்படுகிறது.
இந்தியாவில் பாட்னா (PATNA) மால்வா (MALWA) இவ்விடங்களில் உற்பத்தியாகிறது இதன் குணம் இது விளையும் இடத்தின்
தன்மைப் படி இருக்கும். புதுச் சரக்கு பிசு பிசுப்பாயும், ஊதா நிறமாயும் ஓர்வித
வாசனையோடும் இருக்கும்.
சுவை – கைப்பு, வீரியம் – வெப்பம், பிரிவு – கார்ப்பு
செயல் – துயரடக்கி -------- ANALGESIC (OR) ANODYNE
இசிவகற்றி ------ ANTI SPASMOTIC
தாபமகற்றி ------ ANTI – PHOLOGISTIC
வியர்வை பெருக்கி – DIAPHORETIC
சிறுநீர்
பெருக்கி ------- DIURETIC
கோழையகற்றி --------- EXPECTORANT
குருதிப்போக்கடக்கி – HAEMOSTATIC (STYPTIC)
உறக்கமுண்டாக்கி --- HYPNOTIC
மூர்ச்சையுண்டாக்கி
– NARCOTIC
உறக்கமெழுப்பி ------ SOPORIFIC
தாது
வெப்பகற்றி --- SEDATIVE
வெப்பமுண்டாக்கி – STIMULENT
குணம் –
குன்மம், வாதப்பினிகள், காது நோய், பல்வலி, பேதி, அதிசாரம், மந்தம், எலும்பு பற்றிய
நோய்கள், நாசி நோய்கள், இவைகள் போகும். இரத்த சுத்தியும் உடலுக்கு வன்மையும்
தரும்.
பாடல் –
நல்ல அபினிக் குணத்தை நாடறியும் நாம்புகல்வ
தல்லகுன்மம் வாதம் அருஞ்செவிநோய் – பல்வலி
பேதிமந்தம் அத்திநோய் பீனிசம் போம் வன்மை உண்டாம்
சாதியுதிரச் சுத்திதான்
--- அகத்தியர் குணவாகடம்
குறிப்பு :--
குணத்தை விரித்துரைக்க
அடியிற் குறிப்பிட்ட நோய்களுக்கு இது உபயோகப்படும். அவை – அஜீரண பேதி, அதிசாரபேதி,
சீதபேதி, வாந்திபேதி, அக்கினிமாந்தம், வாந்தி, குன்மம், சூதகவாயு, சூதகவலி,
உதிரசூலை, இரத்தப்போக்கு, பெரும்பாடு, பாண்டு, அதி மூத்திரம், மதுமேகம், பல்வலி,
காத்து நோய், கால்குடைச்சல், எலும்பை பற்றியவலி, கீல்வாதம், இடுப்புவலி,
குதிங்கால் வலி, சந்நி பாத நோய்கள், இசிவு, முதலிய வாதப்பினிகள் மார்புச்சளி,
சுரம், அம்மைகொப்பளம், புண்கள், இருதய தளர்ச்சி, நித்திரை இன்மை, காக்கைவலி,
பயித்தியம், மனக்கலக்கம், சித்த பிரமை தீரும்.
இதை நோயாளிகளுக்கு
கொடுக்கு முன் அடியிற் கண்டபடி சுத்தி செய்து கொள்ள வேண்டும். சுமார் 500 gm கிராம் அபின் எடுத்துக் கொண்டு 2700 ml தீநீர் எடுத்து அதை மூன்று பங்கு செய்து ஒரு பங்கு நீரில் (900ml) அபினியை நன்றாய் கரைத்து ஒரு நாள் முற்றும் (24 மணி நேரம்) ஊறிய பின்
வடிகட்டி திப்பி நீக்கி அந்த திப்பியில் இரண்டாவது பங்கு நீரை விட்டுக் கரைத்து
முன் போல் வடிகட்டி நீரை தனியாக வைத்துக் கொண்டு மீதமுள்ள கப்பியில் மூன்றாவது
பங்கு நீரை விட்டு முன்போல் செய்து எல்லா நீரையும் கலந்து ஒரு பாத்திரத்தில் நீர்
விட்டு அதன் நடுவில் அபின் நீரை வைத்து ஒரு சீராக எரித்து உள் பாத்திரத்தில் உள்ள
நீர் ஆவியாகி வெளியேறி மெழுகு பதம் வரும் போது எடுத்து இறக்கி ஆறவைத்து எடுத்துக்
வைத்துக் கொள்ளவும். இதை நோயாளிக்கு வயது உடல் தகுதிக்கு தகுந்தார் போல் அளவாக
கொடுக்க வேண்டும்.
குறிப்பு :-- சுத்தி
செய்யாமலும், அளவிற்கு அதிகம் இதைச் செலுத்தினால் விசமித்து உயிர் அபாயம்
ஏற்படும்.
அபினியை உபயோகிப்பதற்கு முன் கவனிக்க வேண்டியவை –
அ * சில நோயாளிகளுக்கு இது ஒவ்வாமல் பக்க விளைவுகள் ஏற்படலாம்.
இத்தகையவர்களுக்கு சிறிய அளவு கூட நாடி தீவிரம், தலை பாரம், வலி, வெப்பம், வாந்தி
குமட்டல், குடர்ச் சுருக்கம், வியர்வை இன்மை, தோல் வரண்டு போதல். மயக்கம்
உண்டாகும்.
ஆ * சிறுவர்களுக்கும்
பாலர்களுக்கும் அபினியால் மரணம் நேரிடுவதை பல மருத்துவர்கள் தங்கள் அனுபவத்தில்
கண்டறிந்து இருப்பதால் இதை முற்றிலும் விளக்குவது நல்லது.
இ * உள்ளுக்கு கொள்ள சாப்பிட விருப்பம் இல்லாதவர்களுக்கு
அவசியப்பட்டால் வஸ்த்தி (எனிமா) செலுத்தலாம் மருத்துவர் நிர்ணயித்தால்
கொடுக்கலாம்.
ஈ * வயது முதிர்ந்தவர்களுக்கு கொடுக்கவேண்டிய அளவிற்கு அதிகமானால்,
சுவாசத்தினறல், குறட்டை, கண்ணிருளால், மந்த புத்தி, உணற்சியின்மை, நாடி மெலிந்து
துடிப்பு நடத்தல். காந்தல் சுருங்கல், ஆகிய கெட்ட குணங்கள் உண்டாகும் ஆகையால்
மிக்கவும் கவனித்து கொடுக்க வேண்டும்.
உ * அபினியால் தீங்கு நேரிடும் என்ற நோயாளிகளுக்கு கர்ப்பிணிகளுக்கு
இதை அறவே கொடுக்கக் கூடாது.
சாதிக்காய் மாத்திரை –
ஒரு சாதிக்காயை எடுத்து
அதில் ஒரு குன்றி அளவு அபினியை சாதிக்காயிக்குள் குடைந்து வைத்து சக்கை கொண்டு
மூட்டி அதை ஒரு கம்பியில் குத்தி தேனில் முக்கி நெய் விளக்கில் காட்டி காய் வேகும்
வரை காட்டி பின் கல்வத்தில் போட்டு அரைத்து மெழுகு பதத்தில் எடுத்து வைத்துக்
கொண்டு பாசிப்பயர் அளவு மாத்திரை செய்து ஒருநாளைக்கு இரண்டு மூன்று முறை கொடுக்க அசீரன
பேதி, அதிசாரம், சீத பேதி, கிராணி தீரும்.
சாதிக்கய்ச் சூரணம் :--
சாதிக்காயை சோறு
வேகும்போது அதிற் சொருகி வேகவைத்து எடுத்து உலர்த்தி அதனுடன் அபினி சம எடை எடுத்து
சூரணம் செய்து அதில் ஒன்று இரண்டு குன்றி எடை எடுத்து பத்துகிராம் கல்கண்டு
பொடியில் அல்லது தேனில் கலந்து நாள் ஒன்றுக்கு இரண்டு மூன்று முறை கொடுக்க கிராணி
பேதி நிற்கும்.
கபாடச் சூரணம் :--
அபினி – 30 gm மிளகு – 40
gm சுக்குத்தூள் – 10 gm சீரகத்தூள் – 10
gm பாதாம் பிசின் – 10 gm இவையாவும் எடுத்து சூரணித்து கொண்டு 1, 2 குன்றி குடுக்க பேதி சூலை, இசிவு, தூக்கம் இன்மை தீரும்.
கபாட லேகியம் ---
மேற்கண்ட சூரணம் 300 gm
எடுத்துக் கொண்டு பின் 1 kg நாட்ச்சர்கரை எடுத்து தகுந்த அளவு நீர்விட்டுக் காய்ச்சி பாகு செய்து
அதில் அந்த முன்னூறு கிராம் மேற்கண்ட பொடியைப் போட்டுக் கிளறி எடுத்து வைத்துக்
கொண்டு அதில் 5, 10 கிராம் ஒரு நாளைக்கு 2, 3 தடவை கொடுத்துவர வயிறு பொருமி
உண்டாகும் பேதி உடல் வலி நீங்கும்
கபாட வடகம் –
அபினி – 50 gm சுக்கு – 100
gm சாதிக்காய் – 100 gm சீரகம் – 100 gm அதிவிடயம் – 50 gm பேரிட்சம்
பழம் – 100 gm பேரீட்சம் பழம் நீங்கலாக மற்ற வற்றை பொடித்து சூரணித்து பின் பேரீட்சம் பழம்
சேர்த்து எலுமிச்சம் பலச் சார் விட்டு அரைத்து கடலையளவு மாத்திரை செய்து உலர்த்தி
எடுத்துக் கொண்டு 1,2 மாத்திரை கொடுக்க பேதி
நிற்கும்.
கட்டுவாதிக் குளிகை –
சாதிக்காயை துளைத்து
அதில் மூன்று குன்றி அளவு அபினியை உள்ளே செலுத்தி சாதிக்காய்த் தூளால் மூடி மஞ்சளை
அரைத்து காயிக்கு கவசம் செய்து உலர்த்தி அதற்கு மேல் சீலை மண் செய்து உலர்த்தி
ஒன்று அல்லது ஒன்றை எருவில் புடமிட்டு எடுத்துக் கவசத்தை நீக்கி காய்க்குச் சம எடை
பேரீட்சம் பழம் சேர்த்து தாய்ப்பால் விட்டு அரைத்து பாசிப்பயரளவு மாத்திரை செய்து
வைத்துக் கொண்டு ஒரு மாத்திரை தேனில் கொடுக்க சிறுவர்களுக்கு பேதி காட்டும்.
அபினி எண்ணெய் –
ஒரு இரும்புக்
கரண்டியில் முப்பது மில்லி நல்லெண்ணெய் விட்டு அதில் அபினி ஒரு குன்றி போட்டு
எரித்துக் கரைந்த பின் எடுத்து வைத்துக் கொண்டு காதில் விட காது வலி தீரும்.
அபினி எண்ணெய் (வேறு) –
ஒரு இரும்புக்
கரண்டியில் முப்பது மில்லி நல்லெண்ணெய் விட்டு அதி ஒரு குன்றி அளவு அபினி, ஒரு
குன்றி அளவு கஸ்த்தூரி வேர்ப்பட்டை சிறிய துண்டு, சுக்கு சிறிய துண்டு, சேர்த்து
எரித்து வடித்து வைத்துக் கொண்டு ஒன்றிரண்டு துளி காதில் விட்டு வர காது நோய், காது
குத்தல் வலி, சீல்வடிதல் தீரும்.
ஓமப்பொடி –
ஓமம் 35 gm நாட்டு கற்பூரம்3.5 gm வாதுமை பருப்பு ஒட்டு சுட்ட
கரி 17.5gm அபினி 1 gm எல்லாம் ஒன்று சேர்த்து பொடி
செய்து பல் தேய்த்து வர பல் வலி, வாய் நாற்றம் போகும்.
கண்நோய்க்கு வேது –
அபினியை வெந்நீர் விட்டு
அரைத்து வெண்ணீரில் கலந்து ஆவி எழும்படி காய்ச்சி வெது பிடிக்க கண்நோய் தீரும்
அந்த நீரில் கண் கழுவினாலும் கண் வலி தீரும்.
புற்கை –
வேதனையுடன் கூடிய
வீக்கம், கட்டி, நீர்ப்பை தாபிதம் இவைகளுக்கு, ஊமத்தை இலை, தராயிலை வகைக்கு 35 gm சடாமாஞ்சில், மஞ்சள், வகைக்கு 17 gm அபினி 1gm சேர்த்து அரைத்துப் போதுமான
அளவு நல்லெண்ணை விட்டுக் கிண்டி (பசைபோல்) புற்கை செய்து நோய் உள்ள இடத்தில்
பூசிவர நன்மை செய்யும்.
மேற்பூச்சு தயிலம் –
அபினி 3.5 gm
எடுத்து கல்வத்தில் சிறிது நல்லெண்ணெய் விட்டு அரைத்து
அதை 525 gm நல்லெண்ணையில் கலந்து அதை இளம் சூடு செய்து அதில் 3.5 gm நாட்டுக் கற்பூரம் கலந்து வைத்துக் கொண்டு கீல்
வாதம், இடுப்புவலி, கால் குடைச்சல், குதிங்கால் வலி, எலும்பைப் பற்றிய வலி தீரும்.
மூலத்திற்கு ---
துத்தியிலை, அரிசிமாவு,
அபினி சம அளவு எடுத்து நீர் விட்டு அரைத்து கிளறி மூலவீக்கம் வழிக்கு கட்ட
குறையும்.
குறிப்பு :- இது
தற்காலம் அரசு கட்டுப்பாட்டினால் அனுமதி பெற்று மட்டுமே கிடைக்கும். மற்றும் இது
சேர்ந்த மருந்துகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு உள்ளது மற்றும் ஒரு வேளை
கிடைத்தாலும் மருத்துவரின் ஆலோசனை இன்றி யாரும் பயன் படுத்த வேண்டாம்.
Comments
Post a Comment