அ -வரிசை - அமுக்குரா
அமுக்கரா என்னும் அஸ்வகந்தா :---
இது மனித இனத்திற்கு
கிடைத்த ஒரு மிகச் சிறந்த மூலிகையாக கருதப்படுகிறது. நம் சித்த மருத்துவத்தில்
தமிழக வழக்குப்படி அமுக்குரா என்றும், சம்ஸ்கிருத மொழி வழக்குப்படி அஸ்வகந்தா
என்றும், ஆங்கிலத்தில் விண்டர் செரி ( winter cherry ) என்றும் தாவர இயல் பெயராக
விதானியா சோமணி பிரா withania somnifera என்றும்
வழங்கப் படுகிறது.
இது இந்தியாவின்
மேட்டுப்பாங்கான இடங்களில் பெலுச்சிஸ்தானத்திலும் பயிராகும் செடி வகுப்பைச் சேர்ந்தது. இதன் பழம்
செந்நிறமாய் இருக்கும். இச்செடி சாம்பல் நிறமுடையதாக இருக்கும்.
இதன் – இலை – வேர்
(கிழங்கு) எல்லாம் மருத்துவ உபயோகத்திற்கு ஏற்றது. இது சித்த மருத்துவ மரபுப்படி
அறுசுவைகளின் படி கசப்பு – வெப்பம் – காரம் என்னும் தன்மை களைக் கொண்டது. இதன்
கிழங்கு மருத்துவத்தில் அதிகம் பயன்படுகிறது. இக் கிழங்கு கசப்பு, வெப்பம்,
கார்ப்பு என்னும் அடிப்படையில் உடற் தேற்றி என்னும் செயலி படி உடலில் உண்டாகிற
நோய்களை நீக்கி நல்ல நிலைக்கு கொண்டுவரும், அடுத்து காமம் பெருக்கியாக செயல் பட்டு
உடல் உறவு செயலுக்கான உணர்வுகளை தூண்டச் செய்கிறது. அடுத்து வீக்கமுருக்கி என்னும்
செயல் படி உடலில் உண்டாகிற வீக்கங்களில் அதனை வற்ற வைக்கிறது. சிறு நீர் பெருக்கி
என்னும் செயலால் சிறுநீரை அதிகப் படியாக வெளியேற்றும் செயல் கொண்டது. உரமாக்கி –
பொதுவான உடலின் பலத்தை தருகிற செய்கை உடையது. மற்றும் தாது வெப்பம் அகற்றி என்னும்
செயலால் சித்த மருத்துவப்படி நம் உடலின் ஏழு தாதுக்களின் வெப்பத்தை சமன் செய்யும்
குணமுடையது. உறக்கமுண்டக்கி என்னும் செயலால் தூக்கத்தை உண்டாக்கிற குணம்
கொண்டுள்ளது.
மேற்க்கண்ட குணங்களை
அனுசரித்து நோய்களில் இதனை அளவுப்படி கொடுக்க குணம் தரும் மற்றும் வெப்பம் + கசப்பு + கார்ப்பு
சுவைகளை உடையதால் பித்த நீரை அதிகரிக்கச் செய்து இரத்தத்தை இளகச் செய்கிறது. அதிக
அளவில் சாப்பிட்டால் நீர்க் கடுப்பைத் தரும் அதனால் இந்த வேரை பசும் பாலில் வேகவைத்து
உலர்த்தி பொடி செய்து மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. இது மேற்கண்ட குணங்களை தர
இதனுடன் இணைத்து அல்லது துணைப் பொருள்களின் படி நன்மை செய்யும்.
பயன்பாடு – இலை, விதை, வேர் (கிழங்கு)
சுவை – கைப்பு, வீரியம் – வெப்பம், பிரிவு – கார்ப்பு
செயல் – இலை – வெப்பகற்றி – febrifuge
காய் ---- சிறுநீர் பெருக்கி –
diuretic
கிழங்கு – உடற்தேற்றி --------
alterative
காமம் பெருக்கி ------ aphrodisiac
வீக்கமுருக்கி ----------- deobstruent
சிறுநீர் பெருக்கி ------ diuretic
உரமாக்கி ------------------ tonic
உறக்கமுண்டாகி ----- hyphotic
தாது வெப்பகற்றி ---- sedetive
பாடல் –
கொஞ்சம் துவர்ப்பாம் கொடிய சயம் சூலையரி
மிஞ்சுகரப் பான்பாண்டு வெபதப்பு – விஞ்சி
முசுவுறு தோடமும்போ மோகமன லுண்டாம்
அசுவகந் திக்கென்றறி
பொது குணம் –
சயம் (T.B) வாத சூலை, வாதரோகம், கரப்பான், பாண்டு, சுரம், வீக்கம், ஆயாசம்
இவைகளை நீக்கி பசியை உண்டாக்கும்.
இந் நாளில் இது பற்றி
மிகுந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது. இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இதனை துணை
மருந்தாக சாப்பிடுவதால் மிகுந்த நன்மை ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனை
பாலில் வேகவைத்து உலர்த்தி பொடி செய்ததை நெய், வெண்ணை, தேன் இவற்றுடன்
சாப்பிட்டுவர சுக்கிலம் (விந்து) அதிகரிக்கும். உடல் வன்மை பெரும் உடன் பால்
சேர்த்து வரவும். மற்றும் இம் மருந்தை முதன்மையாகக் கொண்டு சூரணம் லேகியம்
மணப்பாகு, மாத்திரை காப்சூல் என்று பல வடிவங்களில் விற்பனைக்கு வருகிறது. இன்றைய
ஆய்வுகளின் படி மன உளைச்சலுக்கான காரணிகளை குறைத்து சோர்வை நீக்குகிறது.
மேல் பூச்சு – நாட்டு அமுக்கிராங் கிழங்கு பச்சையாகக் கொண்டு வந்து
பசுவின் நீர் விட்டரைத்து கொதிக்கவைத்து கிரந்தி கண்டமாலை வாத வீக்கம் இடுப்புவலி,
இவைகளுக்கு பற்றுப்போட குணமாகும். சுக்குடன் சேர்த்து அரைத்து வீகங்களுக்கு
பற்றுப் போட வீக்கம் வற்றும்.
சீமை அஸ்வகந்தா சூரணம் – சீமை அஸ்வகந்த தேவையான அளவு வாங்கி பசும் பாலில் மூழ்க ஊற்றி
வேகவைத்து சுண்டியபின் எடுத்து உலர்த்தி சூரணித்து வைத்துக் கொண்டு சம அளவு
கல்கண்டு அல்லது சீனி சேர்த்து அரைத்து வைத்துக் கொண்டு பாலுடன் தேனுடன்
வெண்ணையுடன் ஒரு கிராம் முதல் மூன்று கிராம் வரை கொடுத்து வர சயம் வாத சூலை,
வீக்கம், பசிமந்தம், உடல் பருமன் குறையும் நெய்யுடன் சாப்பிட மெலிந்த உடல்
பருக்கும். சுகிலத்தை பெருக்கி காம இச்சையை அதிகரிக்கச்செய்யும்.
அஸ்வகந்தா லேகியம் : –
அ) அமுக்குரா கிழங்கு ---- -- 60 gm
ஆ) பால்முதுக்கன் கிழங்கு – 60 gm
இ) நன்னாரி ---------------------------- 60 gm
ஈ) சீரகம் ----- --------- ---------------- 60 gm
உ) பரங்கிப்பட்டை ------------------ 60 gm
ஊ) சுக்கு ------------- -------------------- 10 gm
எ) மிளகு ------- -------- ---------------- 10 gm
ஏ) திப்பிலி -------- ---------- ---------- 10 gm
ஐ) ஏலக்காய் ------------- ------------- 10 gm
ஒ) உலர்ந்த திராட்ச்சை --------- 50 gm ( இதை மட்டும் தனியாக அரைத்து பின் சூரணத்துடன் கலந்து
கொள்ள வேண்டும் )
இவைகளை பொடித்து நன்றாக சூரணித்து சலித்து சூரணம் + திராட்சை விழுது
இரண்டும் கலந்து வைத்துக் கொளவும். பின் 600 gm சர்க்கரை எடுத்து
நீரில் கலந்து கொதிக்க வைத்து பாகு செய்து 150gm
பசு நெய் விட்டு பொடியை கலந்து இறக்கும் பொது 300 gm தேன் விட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும்.
குணம் – குருதிச் சீர்கேடுகள், பலவீனம், இளைப்பு, இரத்தக் குறைவு,
சுக்கிலக் குறைவு, இரத்தக் கொதிப்பு, பரங்கிப் புண் குருதி ஒழுக்கு மூலம், மற்றும்
உடல் வலுவிற்கும் தாது புஷ்டிக்கும் காம விருத்தி, இரத்த விருத்தி உண்டாகும்.
அமுக்குராச் சூரணம் –
அ) கிராம்பு ------ ------ 1 பங்கு
ஆ) சிறுநாகப்பு ------- 2 பங்கு
இ) ஏலம் ------- -------- 4 பங்கு
ஈ) மிளகு ------- -------- 8 பங்கு
உ) திப்பிலி ------- ------ 16 பங்கு
ஊ) சுக்கு ------- ---------- 32 பங்கு
எ) நாட்டுஅமுக்குரா – 64 பங்கு ------- இவையாவு
சுத்தி செய்து எடுத்துக் கொண்டு இளம் வருப்பாக வறுத்து நன்கு உலர்த்தி பின்
பொடிசெய்து அந்த எடைக்கு சமன் சீனி அல்லது கற்கண்டு பொடித்துச் சேர்த்து வைத்துக்
கொண்டு ஒரு கிராம் முதல் மூன்று கிராம் வரை தேன் அல்லது நெய், வெண்ணையில் கலந்து
அல்லது பாலுடன் சாப்பிட்டு வர குன்மம், வேட்டை, விக்கல், பாண்டு, விந்து நட்டம்
தீரும்
குறிப்பு – இம் மருந்து நாட்டு மருந்துக் கடைகளில்
கிடைக்கும்.
Comments
Post a Comment