அ - வரிசை - அரத்தை

அரத்தை—ARATHTHAI  


















இதில் இரண்டு வகை உள்ளது – சிற்றரத்தை – பேரரத்தை

ஆங்கிலப் பெயர்GALANGEL THE LESSER, GALANGAL
தாவரவியல் பெயர் – ALPINIA CHINENSIS , ALPINIA GALANGA 
இது இந்தியாவின் உஷ்ணப் பிரதேசங்களில் பயிராகிறது.
மருத்துவ உபயோகம் – வேர்
சுவை கார்ப்பு, வீரியம் வெப்பம், பிரிவுகார்ப்பு
செயல் – கோழையகற்றிEXPECTORANT
         வெப்பகற்றி ------- FEBRIFUGE
         பசித்தூண்டி ------ STOMACHIC  
இரு அரத்தைகளின் போதுகுனம்
நெஞ்சுக் கோழை, ஈளை, இருமல், சீதளம்,கரப்பான், மார்பு நோய், மூலம், வீக்கம், தந்த நோய், தந்த மூலப் பிணி, வாத சோணிதம், தீச்சுரத்தால் பிறந்த கபம்,ஆகியவைகளை போக்கு.பசியைத் தரும்.
பாடல் –
தொண்டையிற்கட் டுங்கபத்தைத் தூரத் துரத்திவிடும்
பண்டைச் சீதத்தைப் பறக்கடிக்கும் – கெண்டை விழி
மின்னே ! கரப்பனைவே றாக்கும் பசிகொடுக்கும்
சொன்னோம் அரத்தைச சுகம்
                                                      --- அகத்தியர் குணவாகடம்
மார்பை யடர் பிணிசு வாசகா சம்மூலம்
சோபை தட்டச் சூர்வாத சோனித நோய் – தீபச்
சுரத்தை யடுபடர்பல் தூருறு கண் நேரின்
அறத்தை எடுத்துகள தாம்
                                                     ----- தேரையர் குணவாகடம்
அரத்தையின் குணத்தைக் கேளீர் அக்கரஞ் சன்னிபோக்கும்
உரத்ததொரு இருமல் மாற்றும் ஓங்கிய உதிரம் போக்கும்
இறைத்திடுங் காச மெட்டும் மிஞ்சிய சாயமுந்தீரும்
சுரத்தையும் நீக்கு மென்று சொன்னது வேதநூலே
                                                      --- ஏடு 
தனி அரத்தை சூரனித்து வைத்துக் கொண்டு 1 to 3 gm  எடுத்து தேனில் கலந்து கொடுத்து வர கபத்தை கரைத்து வெளியேற்றும்.
10 gm அரத்தையை இடித்து 300ml நீரில் போட்டு  3 மணி நேரம் ஊறவைத்து அல்லது கொதிக்க வைத்து வடிகட்டி  30ml அளவு கொஞ்சம் தேன் அல்லது சர்க்கரை கலந்து கொடுத்து வந்தாலும் மேற்கண்ட நோய்கள் தீரும்.











சிற்றரத்தையின் சிறப்புக்குனம் ---
       வாந்தி, பித்தம், கரப்பான், வாய், தலைநோய், கப தோட்டம், சீதளம், இருமல், சுரங்கள் தீரும்.
பாடல் –
வாதபித்தம் கரப்பான் வாதஞ்சி ரோரோகம்
சேர்ந்தகப முத்தோ டஞ் சீதமொடு – நேர்ந்த சுரம்
மற்றரத்தைக் காட்டி வரும் இருமலுந்தீரும்
சிற்றரத்தை யின் மருந்தால் தேர்
                                                  --- தேரையர் குணவாகடம்
செயல் –
       அரத்தை ஒருதுண்டை வாயில் போட்டு அதனை சுவைத்து வரும் நீரை விழுங்கி வர சீதளம், கபம், வாந்தி, இருமல் தீரும்
       பித்த தேகிகளுக்கு உண்டாகும் கபக் கட்டுக்கு இதை வழங்கும் போது கற்கன்டையும் சேர்த்து கொடுக்க வேண்டும்.
       சிறு குழந்தைகளுக்கு உண்டாகும் முத்தோடப் பினிகளுக்கு இதை சுட்டுத் தேனில் உரைத்து தாய்ப் பாலில் கலந்து புகட்ட வேண்டும்.
கசாயம் –
       அதிமதுரம், தாளிசபத்திரி, திப்பிலி, சிற்றரத்தை, வகைக்கு 3.5 கிராம் எடுத்து இடித்து 200 ml  நீரில் போட்டு கொதிக்கவைத்து வடித்து தேன் அல்லது சரக்கரையில் கலந்து கொடுக்க கப இருமல், கபக்கட்டு, கப தோஷம், குத்திருமல், சுரம், தலை வலி, சீதளத்தினால் ஏற்படும் தலை பாரம் நீங்கும்.
பேரத்தையின் குணம் ---
இது வாத நோய், வாதவலி, புறவழி,(பின்னிசிவு) பித்தகபம், பித்ததோடம், சீதசுரம், சன்னி பாதம், கபம், கிளைக்கின்ற புண், சிரசில் நீர் ஏற்றம், பெண்களின் ருது தோடம் சர்வவிடம் ஆகியவை தீரும், உடல் வனப்புமிகும்.
இதற்கான பாடல்கள் –
அரத்தைகபத்தை அறுக்குங்கால் ஒட்டுஞ்
சிரத்திளுரும் ஈளையைச் சிதைக்கும் – இரைத்துவரும்
பித்த தோட்டத்தைப் பிறவலிப்பை மாற்றிவிடும்
உற்ற சர்வ வல்விடம் போக்கும்
----  அகத்தியர் குணவாகடம்
சந்நியு பட்சீரணஞ் சார்ந்த சீதச்சுரம்போம்
வண்ண மிகுந்து வளருங்கான்கன்னியர்கள்
மாதவிடாய்க் காகும்வலி வாதக் கடுப்பகலும்
பேதமில்லை பேரரத்தைப் பேணு
வாத மிசிவு வலி சந்நிபித்தையஞ்
சீதசுரம் தாவிரனஞ் சொன்ன நீ – ரோதுபல
வாங்கிடும் பூப்டருமாறு மொளியாகு
மீங்கடரும் பேரத்தையால்
----  அகத்தியர் குணவாகடம்
இம்மருந்து நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்   

Comments

Popular posts from this blog

இ - வரிசை - இலவமரம்

அ - வரிசை - அகில்

அ -வரிசை - அமுக்குரா