இ - வரிசை - இலவு

இலவு – முள்ளிலவு – ILAVU – MUL ILAVU




வேறு பெயர்முள்ளிலவு, சால்மலி, பூரணி, பொங்கல் மோசம்
ஆங்கிலப் பெயர் ---- THE REDSILK – COTTON TREE
தாவரவியல் பெயர் BOMBAX MALABARICUM  ( OR) B. HEPTAPHYLLS 
இது இந்தியாவில் உஷ்ணப் பிரதேசங்களில் வளரும் மரவகுப்பைச் சேர்ந்தது. இதன் பூ குங்குமம் போல் சிவப்பாய் இருக்கும்.














மருத்துவ உபயோகம் – இலவ மரத்தின் குணமும் இதுவும் ஒரே குணத்தைக் கொண்டு இருக்கும்.
சுவை – இனிப்பு, துவர்ப்பு, வீரியம் சீதம், பிரிவுகார்ப்பு
செயல் – இலைகுளிர்ச்சியுண்டாக்கி ----- REFRIGERANT
                 உள் அழல் ஆற்றி -------- DEMULCENT
         பூ --     மலகாரி ------------------------- LAXATIVE
                 சிறுநீர் பெருக்கி ------------ DIURETIC
         விதை காமம் பெருக்கி ------------ APHRODISIAC
                 உள்ளழாற்றி ------------------ DEMULCENT
                 குருதி பெருக்கடக்கி ---- STYPTIC
         பட்டை – துவர்ப்பி ----------------------- ASTRINGENT MILD
                  உள்ளழாற்றி --------------- DEMULCENT
                  சிறு நீர்பெருக்கி --------- DIURETIC
                  உரமாக்கி --------------------- TONIC
         பிசின் –  துவர்ப்பி ----------------------- ASTRINGENT 
                  குருதி பெருக்கடக்கி – STYPTIC
         வேர் --  வெப்பமுண்டாக்கி ----- STIMULANT
                  உரமாக்கி -------------------- TONIC  
குணம் – முள்ளிலவு மரத்தினால் தந்தி மேகம், நீர்த்தாரை வெப்பம் வாத அதிசாரம் போம்
பாடல் –
தந்துமேகஞ் சிறுநீர்த் தாரைவெப் பம்வாய்
வுந்தவரு பெதியிவை யோட்டுங் கான் – முந்திக்
கிளர்வள்ளை பாயும் வரிக் கெண்டை விழியாய் !
                                                    --- அகத்தியர் குணவாகடம்
இலவ மரம், முள்ளிலவ மரம் இவைகளின் குணம் பெரும்பாலும் ஒத்து இருக்கும். இதனால் இவைகளை வழங்கும் விதங்களை ஒன்று சேர்த்து தரப்படுகிறது.














மருத்துவ குணம் – இலையை அரைத்து பசுவின் பாலில் கலந்து கொடுக்க வாத கிரிச்சரம் நீங்கும்.
பூவை கசாயம் செய்து கொடுக்க மலக்கட்டையும், நீர்க்கட்டையும் நீக்கும்.
இதன் விதை – 100 gm
சீரகம் ------------- 50 gm
வால்மிளகு --- 25 gm  இவைகளை தூள் செய்து ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக் கொண்டு 3 gm முதல் 5 gm வரை கொடுக்க தந்தி மேகம், நீர்ச் சுருக்கு, எரிச்சல். தொண்டைப்புண், வாய், நீர்த்தாரையில் இருந்து வரும் இரத்தம் சீழ் பிரமியம் தீரும் தேனில் அல்லது வெண்ணையில் நோயின் தன்மை போல் கொடுக்கலாம்.
இலவம் பிசின் – இதன் பிசினை பொடித்து 1முதல்  2 கிராம் வரை எடை இளநீரில் கலந்து அல்லது இந்தப் பொடியை சாப்பிட்டு இளநீர் குடிக்கவேண்டியது இரண்டு மூன்று வேளை கொடுக்க தந்தி மேகம், நாட்பட்ட மூத்திரச் சூடு, எரிவு, அசீரண பேதி,சீத பேதி குணமாகும்.

இதன் பஞ்சை முன் காலங்களில் விரனங்களுக்கு வைத்து கட்டு வதற்கு பயன் படுத்தியுள்ளனர். இதன் வேரைக் கொண்டும் கசாயம் செய்து மேற்கண்ட நோய்களில் கொடுக்கலாம்.   

Comments

Popular posts from this blog

இ - வரிசை - இலவமரம்

அ - வரிசை - அகில்

அ -வரிசை - அமுக்குரா